பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு முகாம்

Added : பிப் 14, 2020
Advertisement
 அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு முகாம்

திண்டிவனம்:திண்டிவனம் அரசு கல்லுாரியில், கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கல்லுாரியின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், நடந்த முகாமிற்கு, கல்லுாரியின் துணை முதல்வர் நாராயணன் தலைமை தாங்கினார். இயற்பியல் துறை தலைவர் லதா வரவேற்றார். கணிதத் துறை தலைவர் தண்டபாணி முன்னிலை வகித்தார்.கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற முகாமில், சாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் விஜயலட்சுமி, மருத்துவ மேற்பார்வையாளர்கள் யோகானந்தன், புருஷோத்தமன், சிவக்குமார், செவிலியர் விஜயா ஆகியோர் கொரோனா வைரஸ் குறித்து, விழிப்புணர்வு கருத்துக்களைக் கூறினார். தொடர்ந்து மாணவர்களிடம் கொரோனா வைரஸ் குறித்து, கேள்விகள் கேட்டு, விளக்கம் அளிக்கப்பட்டது. முகாமில் வரலாற்றுத்துறை தலைவர் கமலக்கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.உதவி பேராசிரியர் திருமால் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X