பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் மாவட்டத்தில் 89 ஏரிகளுக்கு குத்தகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Added : பிப் 14, 2020
Advertisement

விழுப்புரம்:மாவட்டத்தில் 89 'ஆ' வகை ஏரிகளுக்கு குத்தகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கலெக்டர் அண்ணாதுரை செய்திக்குறிப்பு:விழுப்புரம் மீன்துறை உதவி இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ள தீவிர உள்நாட்டு மீன்வளர்ப்பு மற்றும் விற்பனைத் திட்டத்தின்கீழ் உள்ள 89 'ஆ' வகை ஏரிகள் குத்தகை அடிப்படையில் 1429ம் பசலி முதல் 1431ம் பசலி வரை 1.7.2019 முதல் 31.6.2021 வரை மூன்று ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட உள்ளது.ஒப்பந்தப்புள்ளி கோரும் டெண்டர் விண்ணப்பங்கள் வரும் 25ம் தேதி மாலை 3:00 மணி வரை, விழுப்புரம் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் 300 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மூடி முத்திரையிடப்பட்டு 25ம் தேதி மாலை 5:45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். டெண்டர் ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளின்படி ஏரி குத்தகைக்காக பெறப்பட்ட மூடி முத்திரையிடப்பட்ட விண்ணப்பங்கள் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் அந்தந்த ஏல நாட்களில் ஒப்பந்ததாரர்கள் முன்னிலையில் பிரிக்கப்பட்டு அதிகபட்ச தொகை கோரியவருக்கு குத்தகை உறுதி ஆணை வழங்கப்படும்.மேலும், விவரங்களுக்கு விழுப்புரம் வழுதரெட்டி நித்தியானந்தம் நகரில் உள்ள மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04146 259329 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X