அரசியல் செய்தி

தமிழ்நாடு

தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., கட்சி அலுவலகம் திறப்பு

Added : பிப் 14, 2020
Advertisement
 தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., கட்சி அலுவலகம் திறப்பு

விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி அடுத்த பனையபுரத்தில் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., கட்சி அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு, முத்தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். தெற்கு ஒன்றிய செயலர் முகுந்தன் வரவேற்றார்.விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலர் அமைச்சர் சண்முகம் தலைமை தாங்கி கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து, குத்து விளக்கேற்றினார். தொடர்ந்து முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். ,ஜெ., படத்திற்கு மாலை அணிவித்தார். பின்னர் அலுவலக தீர்மான பதிவேட்டை பார்வையிட்டு கையொப்பமிட்டார்.ஒன்றிய செயலர்கள் முருகன், பன்னீர், நகர செயலர் பூர்ணராவ், முன்னாள் சேர்மன்கள் கலியமூர்த்தி, நாகப்பன், கட்டட சங்க தலைவர் மாறன், வங்கி துணைத் தலைவர்கள் ராஜாங்கம், பலராமன், ஓம்சக்தி, சங்கர், வங்கி இயக்குனர்கள் ராஜவேல், சுப்ரமணி, ரமேஷ், வாசு, தேவராஜ், ஊராட்சி செயலர்கள் கோபாலகிருஷ்ணன், கண்ணப்பன், கிளைச் செயலர்கள் லட்சுமி நாராயணன், தனஞ்ஜெயன், கட்சி நிர்வாகிகள் குமாரராஜா, சுபாகர், மாவட்ட இணைச் செயலர் மலர்விழி, ஒன்றிய மகளிரணி செயலர் செங்கேணி, மகளிரணி துணைச் செயலர் ரேணுகா ராஜவேல், நகர இளைஞரணி பிரகாஷ் உட்பட தெற்கு ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள், ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X