பொது செய்தி

தமிழ்நாடு

தக்காளி கிலோ ஏழே ரூபாய் காய்கறி விலை தொடர் சரிவு

Added : பிப் 14, 2020
Advertisement

திருப்பூர்:திருப்பூர் வடக்கு உழவர் சந்தைக்கு, 35 டன் காய்கறிகள் தினமும் வரும். கடந்த 15 நாளாக, அதிகளவில் காய்கறிகள் வருவதால், விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.கிலோ, 55 ரூபாயாக இருந்த பவானி கத்தரிக்காய் 45 ரூபாய்க்கு விற்கிறது. வெண்டை - 20 ரூபாய், முள்ளங்கி - 10 ரூபாய், பீர்க்கன், பாகற்காய் - 25 ரூபாய்க்கு விற்கிறது. அவரை விலை குறையாமல் கிலோ 35 ரூபாயில் தொடர்கிறது.பச்சை மிளகாய் - 20. இஞ்சி - 60. சின்ன வெங்காயம் - 40, பெரிய வெங்காயம் - 45. உருளை - 30. காலிபிளவர், பீட்ரூட் - 25, கேரட் -, 65, முட்டைக்கோஸ் - 20. பீன்ஸ் - 40. தினம் ஒரு விலைக்கு தேங்காய் விற்கப்படுகிறது. நேற்று கிலோ 40 ரூபாய்க்கு விற்றது. ஒரு வாரமாக, 38 ரூபாயாக விலை இருந்தது. கொத்தமல்லி, புதினா ஒரு கட்டு, ஐந்து ரூபாய்க்கு கிடைத்தது. கறிவேப்பிலை ஒரு கட்டு 40 ரூபாயாக உள்ளது. எலுமிச்சை கிலோ 80 ரூபாய்க்கு விற்கிறது.பூண்டு நேற்று கிலோ, 180 ரூபாய்க்கு விற்றது. காற்றின் வேகம் சற்று குறைந்திருப்பதால், வாழை இலை, வாழைப்பூ, வாழைத்தண்டு விலை குறைந்து காணப்பட்டது. ஒரு மாதம் இறங்கு வரிசையில் இருக்கும் தக்காளி நேற்று மொத்த விலையில் கிலோ, ஏழு ரூபாய்க்கு விற்பனையானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X