பொது செய்தி

தமிழ்நாடு

விஸ்வேஸ்வர சுவாமி கோவில் தெப்பக்குளம் மீட்கப்படுமா?

Added : பிப் 14, 2020
Advertisement
 விஸ்வேஸ்வர சுவாமி கோவில் தெப்பக்குளம் மீட்கப்படுமா?

திருப்பூர்:வீரராகவப்பெருமாள்கோவில் அருகே உள்ள, தெப்பக்குளத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மீட்டுத்தர வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.திருப்பூர் மாநகராட்சி சார்பில், பூ மார்க்கெட் இயங்கி வந்த பகுதியில், 'ஸ்மார்ட் சிட்டி'யில் புதிய கட்டட வளாகம் அமைக்கப்பட உள்ளது. அந்த இடம், கோவிலுக்கு உட்பட்ட தெப்பக்குளம். குளத்தை மீட்டுத்தர வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
கொங்கு மண்டலம் ஆடல் வல்லான் அறக்கட்டளை, இந்து முன்னணி, உலகலாவிய ஓம் நமசிவாய அறக்கட்டளை, உமாசங்கர் சாந்தி அறக்கட்டளை மற்றும் பக்தர்கள், தெப்பக்குளத்தை மீட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டுமென, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.டி.ஆர்.ஓ., சுகுமாரிடம் கொடுத்த மனுவில், 'விஸ்வேஸ்வர சுவாமி, வீரராகவப்பெருமாள் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம், பெருமாள் கோவில் அருகே இருந்துள்ளது. தெப்பக்குள விநாயகர் கோவில் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளது.கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தை ஆக்கிரமித்து, பூக்கடைகள் இயங்கி வந்தன. பணிகளுக்காக, பூ மார்க்கெட் கடைகளை அகற்றிய போது, தெப்பக்குளம் இருந்ததற்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளன. எனவே, கோவில் தெப்பக்குளத்தை மீட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, தெப்பக்குளம் மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் வக்கீல் சத்தியமூர்த்தி கூறுகையில், ''விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள கல்வெட்டில், அப்பகுதியில் தெப்பக்குளம் இருந்தது உறுதியாகிறது.கோவிலும் தனியார் வசம் இருந்தது; அறங்காவலர் நியமனக்குழு தலைவரால், 1999ல் மீட்கப்பட்டுள்ளது. எனவே, தெப்பக்குளத்தை மீட்டு, கோவிலுக்கு ஒப்படைக்க வேண்டும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X