பொது செய்தி

தமிழ்நாடு

'டேலி' பயிற்சிக்கு சிறப்பு மையம் திறப்பு

Added : பிப் 14, 2020
Advertisement

திருப்பூர்:கோவை, சாயிபாபா காலனி, என்.எஸ்.ஆர்., ரோட்டில், டேலி பயற்சி அளிப்பதற்காக மையம் திறக்கப்பட்டது.ஏ.எக்ஸ்.என்., இன்போ டெக் நிறுவனம் சார்பில், திருப்பூர், ஈரோடு பகுதிகளில், டேலி அக்கவுன்ட்ஸ் சாப்ட்வேர் விற்பனை, சேவை மற்றும் பயிற்சியை வழங்கி வருகிறது.இந்நிறுவனத்தின் சிறப்பு பயிற்சி மையம் கோவை சாயிபாபா காலனி, என்.எஸ்.ஆர்., ரோட்டில், துவக்கப்பட்டது. ரோட்டரி மாவட்ட ஆளுநர் நாமினி ராஜசேகர் சீனிவாசன் திறந்து வைத்தார்.இளம் தொழில்முனைவோர் பள்ளி தலைவர் மணிவண்ணபிரபு, ஜூனியர் சேம்பர் மண்டல இயக்குனர் கனிவளன், டேலி சொல்யூசன் தமிழ்நாடு மண்டல மேலாளர் காந்தி மெய்யப்பன், பிசினஸ் மேலாளர் மாரிமுத்துராஜ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.சிவசக்திவேல் கூறுகையில், ''அக்கவுன்ட்ஸ் பணியாளர்கள் மட்டுமின்றி, நிறுவன உரிமையாளர்களுக்கும் இதற்கான பயிற்சியில் சேரலாம். அதேபோல், பள்ளி மற்றும் கல்லுாரிகளில் அக்கவுன்ட்ஸ் பிரிவில் பயிற்றுவிப்போருக்கும் சாப்ட்வேர் பயன்பாடு குறித்து பயிற்சி அளிக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X