பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சியில் வரி வசூல் தீவிரம்: 60 சதவீதம் எட்டியது

Added : பிப் 14, 2020
Advertisement

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சியில் வரி வசூல் பணி மும்முரமாக நடக்கிறது. வரி செலுத்துவோர் வசதிக்காக மைய அலுவலகத்தில் கூடுதல் கவுன்iafர் இன்று முதல் செயல்படுகிறது.திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. இவற்றில் உள்ள கட்டடங்கள், குடிநீர் பாதாள சாக்கடை இணைப்புகள் மற்றும் தொழில் வரி என பல்வேறு இன வரிகளை மாநகராட்சி நிர்வாகம் வசூலிக்கிறது.
மாநகராட்சியில் 2.20 லட்சம் சொத்து வரி விதிப்புகள் மூலம் 80 கோடி ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மேலும் 1.56 லட்சம் குடிநீர் குழாய் இணைப்புகள் மூலம் 20 கோடி ரூபாய்; 11 ஆயிரம் தொழில் வரி விதிப்பு மூலம் 4 கோடி ரூபாய் மற்றம் 13 ஆயிரம் பாதாள சாக்கடை இணைப்பு மூலம் ஒரு கோடி ரூபாய் என வரியினங்கள் வசூலாகிறது.தற்போது மாநகராட்சி மைய அலுவலகத்தில் இரு கவுன்ட்டர்கள்; மண்டல அலுவலகங்கள், துணை மையங்கள், குமரன் வணிக வளாகம் உள்ளிட்ட மையங்களில் வரி வசூல் நடந்து வருகிறது.
மைய அலுவலகத்தில் உள்ள வசூல் மையத்தில் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வரி செலுத்துகின்றனர். அவர்கள் வசதிக்காக இன்று 14 ம் தேதி முதல், கூடுதலாக ஒரு கவுன்டர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வரி வசூல் நிலவரம்திருப்பூர் மாநகராட்சி வரி வசூல் மையங்களில் இது வரை வரி வசூல் ஏறத்தாழ 60 சதவீதம் எட்டியுள்ளது. சொத்து வரியில் 42 கோடி ரூபாய்; குடிநீர் கட்டணம் 12 கோடி ரூபாய்; தொழில் வரி 2.5 கோடியும் பாதாள சாக்கடை இணைப்பு கட்டணத்தில் 35 லட்சம் ரூபாயும் இதுவரை வசூலாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X