சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகளை பணி செய்ய விடாமல் மிரட்டிய மூவர் கைது

Added : பிப் 14, 2020
Share
Advertisement

திருவெண்ணெய்நல்லுார்:திருவெண்ணெய்நல்லுார் அருகே மணல் கடத்தியபோது மாட்டு வண்டியை பறிமுதல் செய்த வருவாய் ஆய்வாளர் மற்றும் வி.ஏ.ஓ.,வை மிரட்டி அரசு பணி செய்யவிடாமல் தடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஏமப்பூர் பகுதியைச் சேர்ந்த சிலர் இரு சக்கர வாகனங்களில் மலட்டாற்றில் மணல் திருடி அப்பகுதியில் மொத்தமாக கொட்டி வைத்து மாலையில் மாட்டு வண்டியில் விற்பனை செய்யப்படுவதாக வருவாய் துறையினருக்கு புகார் வந்தது.இதனையடுத்து, வருவாய் ஆய்வாளர் பரணி மற்றும் வி.ஏ.ஓ., சரவணன், கிராம உதவியாளர் சுரேந்தர்நாத் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.அப்போது, மாட்டு வண்டியில் மணல் கடத்திச் சென்ற அதே ஊரைச் சேர்ந்த முருகன் என்பவரின் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அப்போது, வழியில் ஏமப்பூரைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் முருகன், 28; ராசுவேல் மகன் சக்திவேல், 25; கந்தையன், 40; குப்பன், 45; ஜெயபதி, 50; ஆகியோர் தடுத்து நிறுத்தி அதிகாரிகளை திட்டி மிரட்டி அரசு பணி செய்யவிடமால் தடுத்தனர்.இது குறித்து வருவாய் ஆய்வாளர் பரணி கொடுத்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார், 5 பேர் மீது வழக்கு பதிந்து முருகன், சக்திவேல், கந்தையன் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X