சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை மிரட்டல் வாலிபர் கைது

Added : பிப் 14, 2020
Advertisement

அவலுார்பேட்டை:அவலுார்பேட்டை அருகே கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம், காட்டேரி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடகிருஷ்ணன், 48; இவருக்கும் அவலுார்பேட்டை அடுத்த எய்யில் கிராமத்தைச் சேர்ந்த உறவினரான சம்பத், 40; என்பவருக்கும் நகை தொடர்பாக முன்விரோதம் உள்ளது.இந்நிலையில் எய்யிலில் உள்ள மாமனார் படவேட்டான் வீட்டில் நடந்த திருமண விழாவிற்காக கடந்த 9ம் தேதி வெங்கடகிருஷ்ணன் வந்துள்ளார். அப்போது, வெங்கடகிருஷ்ணனையும், அவரது அக்காவையும், சம்பத் ஆபாசமாக திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.இது குறித்த புகாரின் பேரில் அவலுார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து சம்பத்தை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X