சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாக்கடை கால்வாய் இல்லாமல் ரோடு: பொதுமக்கள் முற்றுகையால் பரபரப்பு

Added : பிப் 14, 2020
Advertisement
 சாக்கடை கால்வாய் இல்லாமல் ரோடு: பொதுமக்கள் முற்றுகையால் பரபரப்பு

அவிநாசி:'திருமுருகன்பூண்டி கணபதி நகரில், கழிவுநீர் வடிகால் அமைக்காமல், ரோடு போட கூடாது' என வலியுறுத்தி, பேரூராட்சி அலுவலகம் முன், குடியிருப்புவாசிகள் முற்றுகையில் ஈடுபட்டனர்.அவிநாசி அருகே, திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்குட்பட்ட, 11வது வார்டு கணபதி நகர் குடியிருப்புவாசிகள், நேற்று திருமுருகன்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் முற்றுகையில் ஈடுபட்டனர்.
செயல் அலுவலர் குணசேகரனிடம், குடியிருப்புவாசிகள் கூறியதாவது;கணபதிநகரில், 70க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு தார் ரோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது. இங்குள்ள வீடுகளுக்கு, வடிகால் வசதி இல்லாததால், கழிவுநீர் ரோட்டிலேயே வழிந்தோடுகிறது; வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்து விடுகிறது.
எனவே, ரோடு அமைக்கும் பணியோடு, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியையும் மேற்கொள்ள வேண்டும்; இங்குள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.செயல் அலுவலர் குணசேகரன் கூறுகையில், ''11வது வார்டில் ரோடு அமைக்க மட்டும், 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் கோரிக்கை ஏற்பதான் ரோடு அமைக்கப்படுகிறது. அதிகளவில் பாறை இருப்பதால் கால்வாய் கட்டுமானத்தில் சில பிரச்னை ஏற்பட்டது. பொறியாளருடன் ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X