பொது செய்தி

தமிழ்நாடு

'தானியங்கி விசைத்தறிகளாக மாற்றித்தர வேண்டும்!'

Added : பிப் 14, 2020
Advertisement

பல்லடம்:திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி தொழில் சார்ந்த உரிமையாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் பங்கேற்ற சந்திப்பு கூட்டம், கோவையில் நடந்தது.மத்திய ஜவுளி துறை செயலாளர் ரவி கபூர் தலைமை வகித்தார். இரண்டு மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சார்பில் உரிமையாளர்கள் சார்பில், அதன் தலைவர் வேலுசாமி, செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்றனர்.
இது குறித்து, கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமயைாளர் சங்க தலைவர் வேலுசாமி கூறியதாவது:ஜாப் ஒர்க் அடிப்படையில் தொழில் செய்து வரும் நாங்கள், எட்டு ஆண்டுகளாக கூலி உயர்வு கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறோம். கைத்தறிகளை போன்று விசைத்தறிகளுக்கும் ரக ஒதுக்கீடு செய்து தர வேண்டும். திருப்பூர் - -பல்லடம் இடையே ஜவுளி சந்தை ஏற்படுத்தி தர வேண்டும் என, பத்து ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தை நாங்கள் ஏற்று கொள்கிறோம்.ஆனால், இப்போதைய சூழலில் உடனடியாக எங்களால் அடுத்த தொழில் நுட்பத்துக்கு மாற முடியாது.
எனவே, நாங்கள் வைத்திருக்கும் தறிகளை நீங்களே எடுத்துக் கொண்டு, எங்களுக்கு தானியங்கி தறிகளாக மாற்றி தர வேண்டும். நவீன தொழில்நுட்பத்தை நாங்கள் பயன்படுத்த, வட்டியில்லா கடன் வழங்கி உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.விசைத்தறியாளர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜவுளித்துறை செயலாளர், புதிய ஜவுளி கொள்கை, வரும் ஏப்., மாதம் வெளியாகவுள்ளது. அதில், விசைத்தறி தொழிலில் கோரிக்கைகள் அனைத்தும் இடம்பெறும் என்று உறுதி அளித்தார். செயலாளர் பாலசுப்ரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X