பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' வைரஸ் விழிப்புணர்வு முகாம்

Added : பிப் 14, 2020
Advertisement

பொங்கலுார்:பொங்கலுார் கோவில் பாளையம் புதுார் டெர்ப்ஸ் அகாடமி கலை அறிவியல் கல்லுாரியில், 'கொரோனா' வைரஸ் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.கல்லூரி இயக்குனர் இளங்குமரன் தலைமையில் நடந்தது. பொங்கலுார் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரவேல், சியாமளா கவுரி, நவீன்ராஜ் ஆகியோர் கெரோனா வைரஸ் தாக்குதல் அறிகுறிகள், தடுப்பு முறைகள், கை கழுவுதல் முறை பற்றி விளக்கம் அளித்தனர். இந்நோயின் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகவேண்டும்.சத்தான உணவு உட்கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ள வேண்டும் என்று, அறிவுறுத்தினர். நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் ரோட்டராக்ட் கிளப் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. இதில், 35 பேர் ரத்த தானம் செய்தனர்.கல்லுாரி முதல்வர் ஆனந்த முருகன், மருத்துவ அலுவலர் ராஜேந்திர குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வரதராஜன், சுகாதார ஆய்வாளர்கள் கந்தசாமி, கண்ணதாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X