கலெக்டர் அலுவலகமே கலங்குது! இது, பொதுப்பணித்துறை கைங்கர்யம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் அலுவலகமே கலங்குது! இது, பொதுப்பணித்துறை 'கைங்கர்யம்'

Added : பிப் 14, 2020
Share
 கலெக்டர் அலுவலகமே கலங்குது! இது, பொதுப்பணித்துறை 'கைங்கர்யம்'

திருப்பூர்:திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், சுற்றுச்சுவர், மழைநீர் வடிகால், மின்கம்பங்கள் என, ஏழு கோடி ரூபாய் மதிப்பிலான, மேம்பாட்டு பணி, 2018ல் துவங்கியது.படிப்படியாக, ஒவ்வொரு பணியாக மேற்கொள்ளப்படுகிறது.பொதுப்பணித்துறை சார்பில் டெண்டர் நடத்தி, ஒப்பந்ததாரர் மூலமாக, பணி மேற்கொள்ளப்படுகிறது.
பொதுப்பணித்துறை உரிய முறையில், கண்காணிக்கிறதா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.கடந்த 2019 பிப்., 10ம் தேதி, கலெக்டர் அலுவலகத்தை சுற்றிலும், தார்ரோடு அமைக்கும் பணி துவங்கியது. மண் பாதையை தோண்டி, அதன்மீது கிரஷர் மண் கொட்டி பரப்பப்பட்டது. தார்ரோடு அல்லது 'பேவர் பிளாக்' கற்கள் பதிப்பதா என, முடிவு செய்யப்படாமல் இருந்தது.கிரஷர் மண் கலந்த ஜல்லிக்கற்களை கொட்டி பரப்பியுள்ளதால், அரசு அதிகாரிகளின் 'ஜீப்'கள், 'டூ வீலர்'களின் டயர் கிழந்து தொங்கும் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறைகேட்பு கூட்டத்துக்கு வரும், முதியோர்களும், டூவிலரில் இருந்து சறுக்கி விழுந்து, காயத்துடன் எழுந்து செல்கின்றனர்.கடந்த ஓராண்டாக இதேநிலை தான் நீடிக்கிறது. காரணம், கலெக்டர் அலுவலகத்தை சுற்றிலும் தார்ரோடு பணியை, கிடப்பில் போட்டதுதான். இரண்டு கலெக்டர்கள் மாறியும் கூட, இப்பிரச்னைக்கு தீர்வே கிடைக்கவில்லையே என, அங்குள்ள அலுவலர்களும், பணியாளரும் கவலை தெரிவித்துள்ளனர்.
அரசு அலுவலர்கள் கூறுகையில்,'பொதுப்பணித்துறையின் கண்காணிப்பு இல்லாததால், ஓராண்டாக ஜல்லிக்கல் பாதையை பயன்படுத்தி வருகிறோம். கலெக்டர் அலுவலகத்திலேயே இந்தநிலை என்றால், வேறு எங்கு சென்று முறையிடுவது.கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகள், முன்பக்கமாக வந்து செல்வதால், அலுவலக வளாகத்தை சுற்றி நடப்பது தெரிவதே இல்லை. மற்றவர்களும், இப்பிரச்னையை பார்வைக்கு கொண்டு செல்லவில்லை. ஓராண்டு சாதனையை கொண்டாடாமல், இனியாவது பரிகாரம் தேட வேண்டும்' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X