தமிழ்நாடு

தவிப்பு: பரமக்குடி, முதுகுளத்தூர் விவசாயிகள்...: நெல் கொள்முதல் மையங்கள் இல்லை

Added : பிப் 14, 2020
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் 16 இடங்களில் நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டாலும் விவசாயிகள் அதிகம் உள்ள முதுகுளத்துார், பரமக்குடியில் திறக்கப்படாததால் அப்பகுதி விவசாயிகள் தவிக்கின்றனர்.

மாவட்டத்தில் நான்கு ஆண்டுகளாக போதிய மழையின்றி நெற்பயிர்கள் கருகியது. விளைச்சல் இல்லாத நிலையில் நஷ்டம் அடைந்தனர். 2019ல் போதுமான பருவ மழை பெய்ததால் கண்மாய், குளங்கள்நீர்நிலைகளில் மழை நீர் சேமிக்கப்பட்டது. பருவ மழை அதிகளவு பெய்ததால் 2.50 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது.விளைச்சல் அமோகமாக இருந்ததால், நெல் அறுவடை ஜன. முதல் நடந்து வருகிறது.

அமோக விளைச்சல் காரணமாககுறைந்த விலைக்கு வெளியிடங்களில் விவசாயிகள் விற்பனை செய்யும் அவல நிலை உள்ளது. மாவட்டத்தில் 16 இடங்களில் நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டுள்ளது.விவசாயிகள் அதிகம் உள்ள முதுகுளத்துார், பரமக்குடி பகுதிகளில் வேளாண் விற்பனைமைய கிடங்கு வசதி இருந்தும் இப்பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்படவில்லை.

இப்பகுதி விவசாயிகள்நெல்லுக்கு உரிய விலை கிடைக்காமல் தவிக்கின்றனர்.அரசு கொள்முதல் மையங்களில்முதல் தர நெல் கிலோ ரூ.19:05க்கும், இரண்டாம் தர நெல் ரூ.18:50 க்கும் கொள்முதல்செய்யப்படுகிறது. தனியார் வியாபாரிகள் கிலோ 12 முதல் 13 ரூபாய்க்கு மட்டுமே வாங்குவதால்விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர்.

வைகை பாசன விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் மதுரை வீரன் கூறியதாவது:

அரசு நெல் கொள்முதல் மையங்கள் பரமக்குடி, முதுகுளத்துார் பகுதிகளில் திறக்கப்பட வில்லை. நெல் இருப்பு வைக்க பல கோடி ரூபாயில் கிடங்குகள் கட்டி பயன்பாடின்றி உள்ளது. விவசாயிகள் அதிகம் உள்ள முதுகுளத்துார், பரமக்குடி பகுதியில் நெல் கொள்முதல் மையங்களை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X