பொது செய்தி

தமிழ்நாடு

இரட்டை மடி, சுருக்குமடி வலையில் மீன் பிடிப்போரை கண்காணிக்க குழு

Added : பிப் 14, 2020
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாலை நடந்த மீனவர் குறைதீர் கூட்டத்தில் மீனவர் சங்க பிரதிநிதிகள் பேசியதாவது:

இரட்டை மடி, சுருக்குமடியில் காலை 7:00 மணிக்கு கரைப்பகுதியில் மீன் பிடிக்கின்றனர். இவர்களின் படகு, வலையை பறிமுதல் செய்தால் மட்டுமே தடுக்க முடியும். இரட்டை மடியில் மீன் பிடிப்பவர்கள் குறித்து தெரிவித்தால் கொலை மிரட்டல் வருகிறது.மீன்வளத்துறையினர் ஆய்வுக்கு வரும் போது எங்கள் படகுகளைத் தான் வாங்கி செல்கிறார்கள். தற்போதுள்ள வலைகள் 60 முதல் 70 அடி வரை உள்ளது. இது ஆழ்கடலில் டியூனா மீன்பிடிப்பதற்காக உபயோகப்படுத்தப்படும் வலைகள். இதைக் கொண்டு கரையோரத்தில் மீன் பிடிக்கின்றனர். இதை தடுக்க கடலோர காவல்படை மூலம் கண்காணித்து தடுக்கலாம்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சம்பை, வடகாடு, மாங்காடு பகுதிகளில் செயல்படும் இறால் பண்ணைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டு படகுக்கு மாற்றாக நவீன படகு வழங்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளதுபோல் மீன் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும், என்றனர்.

இதற்கு பதிலளித்த கலெக்டர் வீரராகவ ராவ், இதுவரை இரட்டை மடி, சுருக்குமடி மூலம்
மீன் பிடித்தவர்களின் 30 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.7 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு
உள்ளது. பாம்பன் பாலத்தில் சுகாதாரக்கேடு, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போலீசார் அலுவலர்கள் அதை கண்டுகொள்வதில்லை, இது குறித்து அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கும், போலீசாருக்கும் உத்தரவிடப்பட்டுஉள்ளது.

இரட்டை மடி வலைகள் மூலம் மீன்பிடிப்பவர்களை கண்காணிக்க விரைவுப்படகுகளுடன் சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X