பொது செய்தி

இந்தியா

எம்.பி.,க்களின் தகவல் தொடர்பு: அதிகாரிகளுக்கு அரசு எச்சரிக்கை

Updated : பிப் 14, 2020 | Added : பிப் 14, 2020 | கருத்துகள் (1)
Advertisement
எம்.பி.,க்கள், தகவல் தொடர்பு: # அதிகாரிகள், அரசு எச்சரிக்கை#

புதுடில்லி : 'எம்., பி., - எம்.எல்.ஏ., உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து தகவல்களை கையாளும் விஷயத்தில், விதிமுறைகளை பின்பற்றாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அரசு எச்சரித்துள்ளது.
மத்திய பணியாளர் நலன் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு அமைச்சகத்தின் சார்பில், மத்திய அரசு அலுவலகங்கள், மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:





எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் ஆகியோர், நாட்டு மக்களின் பிரதிநிதிகளாக செயல்படுகின்றனர். நம் ஜனநாயக கட்டமைப்பில் முக்கிய பங்காற்றுகின்றனர். மத்திய, மாநில அரசுகளிடமிருந்து, பல்வேறு தகவல்களை கேட்பது, அதன் மீது நடவடிக்கை எடுப்பது ஆகியவை, இவர்களின் முக்கிய கடமையாக உள்ளது.குறிப்பாக, பார்லிமென்ட் மற்றும் சட்டசபை அலுவல்கள் நடக்கும்போது, மக்கள் பிரநிதிகள் அதிகமான தகவல்களை கேட்பர்.

இந்த விவகாரத்தில், அதிகாரிகள் எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான விதிமுறையும் வகுக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக, இந்த விதிமுறைகள் மீறப்படுவதாக, அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. எனவே, மக்கள் பிரதிநிதிகளின் தகவல்களை கையாளுவதில், விதிமுறைப்படி செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்படாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
14-பிப்-202009:13:13 IST Report Abuse
RajanRajan கடும் நடவடிக்கை எடுங்கள். இங்கு எச்சரிக்கை என எதுவும் தேவை இல்லையே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X