11 ஆண்டுகளாக காவிரி குடிநீர் இணைப்பு இல்லாத கிராமம்: உப்பு நீரை பருகும் அவலம்

Added : பிப் 14, 2020
Advertisement

கமுதி:கமுதி அருகே காவிரி குடிநீர் திட்டம் துவக்கப்பட்ட நாள் முதல் 11 ஆண்டுகளாக காவிரி குடிநீர் இணைப்பே இல்லாததால், கிராம மக்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தும் உவர்ப்பு நீரை பருகும் அவலத்திற்கு ஆளாகியுள்ளதாக ஆனையூர் ஒன்றிய கவுன்சிலர் உதயணன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ரவியிடம் புகார் தெரிவித்தார்.
கமுதி அருகே ஆனையூர் ஊராட்சிக்கு உட்பட்ட உரத்துார் கிராமத்தில், 60 குடும்பங்கள் உள்ளது. இங்கு காவிரி குடிநீர் திட்டம் துவக்கப்ட்ட 2009 முதல் இதுவரையில் குழாய் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் உரத்துார் கிராம மக்கள் குடி நீருக்காக 18 கி.மீ.,ல் உள்ள பேரையூருக்கு பயணிக்கும் அவல நிலை உள்ளது.

இதனால் உரத்துார் கிராம மக்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தும் உவர்ப்பு நீரை பருகும் அவல நிலைக்கு ஆளாகியுள்ளனர். உரத்துார் கிராம மக்களுக்கு காவிரி குடிநீர் குழாய் இணைப்பு வழங்க கோரி, ஆனையூர் ஒன்றிய தி.மு.க., கவுன்சிலர், கமுதி ஊராட்சி ஒன்றிய தலைவர் தமிழ்செல்வி, ஆணையாளர் ரவியிடம் புகார் அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X