சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் அரசு பஸ்சில் மாணவர்கள் ஆபத்தான பயணம்

Added : பிப் 14, 2020
Advertisement
 ராமநாதபுரத்தில் அரசு பஸ்சில் மாணவர்கள் ஆபத்தான பயணம்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக பஸ்களில் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம்மேற்கொள்கின்றனர். கூடுதல் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமநாதபுரத்தில் இருந்து மதுரை ரோட்டில் சேதுபதி அரசு கல்லுாரி, பொறியியல் கல்லுாரி உள்ளது.கீழக்கரை பகுதியில் பல கல்லுாரிகள் இயங்கி வருகிறது. காலையில் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். மாணவர்கள் உரிய நேரத்திற்கு கல்லுாரி செல்வதற்காகஅரசு டவுன் பஸ்களில் பயணிக்கின்றனர்.

போதுமான அரசு பஸ்கள் இயக்கப்படாததால் பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்வது அதிகரிக்கிறது. இது போன்ற ஆபத்தான பயணத்தை மாணவர்கள்தினமும் செய்கின்றனர். அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் இது போன்ற பள்ளி, கல்லுாரி நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்கி ஆபத்தான பயணத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X