பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரிஅமையும் இடத்தில் கலெக்டர் ஆய்வு

Added : பிப் 14, 2020
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக்கல்லுாரி அமையும் பட்டணம்காத்தான் அம்மா பூங்கா பகுதியில் கலெக்டர் வீரராகவ ராவ் ஆய்வு மேற்கொண்டார்.

ராமநாதபுரத்தில் மத்திய, மாநில அரசு பங்களிப்பில் ரூ.345 கோடியில் அரசு மருத்துவக்கல்லுாரி அமைக்கப்படவுள்ளது. இதற்காக பட்டணம்காத்தான் அம்மா பூங்கா அருகே 22.6 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மருத்துவக்கல்லுாரி அமையும் இடங்களை சுத்தப்படுத்தும் பணி துவங்கியுள்ள நிலையில், கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் பொறியாளர்கள், அதிகாரிகள் மருத்துவக்கல்லுாரி அமையும் பகுதியில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

மருத்துவக்கல்லுாரி வரை படத்தை கொண்டு எங்கெங்கு கட்டடங்கள் அமைகிறது, என்பதை பொறியாளர்கள் கலெக்டரிடம் விளக்கினர். மருத்துவமனை, மருத்துவக்கல்லுாரி கட்டடப் பணிகளை மூன்று தனியார் நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. மார்ச்சில் தொடங்கும் பணிகளை 16 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வின் போது கூடுதல் கலெக்டர் பிரதீப்குமார், சப்-கலெக்டர் சுகப்புத்திரா, ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி டீன் அல்லி, பொதுப்பணித்துறை பொறியாளர்கள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X