இந்தியா

ஒதுக்கீடு! ஐ.ஏ.எஸ்., பதவி உயர்வு பெற்றவர்களுக்கு இலாகா... அரசு செயலராக நியமித்து அரசாணை வெளியீடு

Added : பிப் 14, 2020
Advertisement
ஒதுக்கீடு! ஐ.ஏ.எஸ்., பதவி உயர்வு பெற்றவர்களுக்கு இலாகா... அரசு செயலராக நியமித்து அரசாணை வெளியீடு

புதுச்சேரி:ஐ.ஏ.எஸ்., பதவி உயர்வு பெற்ற அதிகாரிகள், அரசு செயலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசு செயலர்
சீனியர் பி.சி.எஸ்., அதிகாரிகளான சுந்தரேசன், ஜெயந்தகுமார் ரே, ரவிப்பிரகாஷ், ஸ்மித்தா, பங்கஜ்குமார் ஜா, வல்லவன் ஆகிய 6 பேருக்கும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக பதவி உயர்வு அளித்து, மத்திய பணியாளர் அமைச்சகம் கடந்த மாதம் உத்தரவு வெளியிட்டது.இதை தொடர்ந்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்ற 6 அதிகாரிகளை புதுச்சேரி அரசு செயலர்களாக நியமித்தும், அவர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்தும், புதுச்சேரி அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது.
இலாகா ஒதுக்கீடு
அரசு செயலர் சுந்தரேசனுக்கு, செய்தி மற்றும் விளம்பரத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், கவர்னரின் சிறப்பு செயலராகவும், உள்துறை சிறப்பு செயலராகவும் சுந்தரேசன் பணியாற்றுவார்.ஜெயந்தகுமார் ரே, டில்லியில் உள்ள புதுச்சேரி அரசு விருந்தினர் விடுதியின் சிறப்பு உள்ளிருப்பு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசு செயலராக நியமிக்கப்பட்டுள்ள ரவிப்பிரகாஷூக்கு, ஊரக மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் (டி.ஆர்.டி.ஏ.,) சேர்மன், திட்ட இயக்குனர், புதுப்பிக்கவல்ல எரிசக்தி முகமையின் (ரீப்) மேலாண் இயக்குனர் ஆகிய பொறுப்புகளையும் ரவிப்பிரகாஷ் கவனிப்பார்.ஸ்மித்தாவுக்கு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் துறையின் இயக்குனர் பொறுப்பையும் அவர் கவனிப்பார். கூட்டுறவுத் துறை சிறப்பு செயலர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராகவும் பணியாற்றுவார்.பங்கஜ்குமார் ஜாவுக்கு, முப்படை நலம், சுதந்திர போராட்ட வீரர்கள் பிரிவு, தீயணைப்பு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சிறைத் துறை ஐ.ஜி.,யாவும், பேரிடர் மேலாண்மைக்கான மாநில செயல் கமிட்டியின் இயக்குனராகவும் பணியாற்றுவார்.அரசு செயலர் வல்லவனுக்கு, தொழிலாளர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் நல ஆணையர், குடிமைப் பொருள் வழங்கல் துறையின் சிறப்பு செயலர் மற்றும் இயக்குனர் ஆகிய பொறுப்புகளையும் வல்லவன் கவனிப்பார்.
இலாகா மாற்றம்
மேலும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிலரின் இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.கலெக்டர் அருணிடம், ஸ்மார்ட் சிட்டி மேம்பாட்டு நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி பதவி ஒப்படைக்கப்பட்டுள்ளது.ஐ.ஏ.எஸ்., அதிகாரியான சவுமியாவிடம், பொது நிர்வாகம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.பணியாளர் துறையின் சிறப்பு செயலர் பதவியையும் கவனிப்பார்.இதற்கான ஆணையை, தலைமைச் செயலர் அஸ்வனிகுமார் வெளியிட்டுள்ளார்.


முதல்வரின் செயலர் விக்ராந்த் ராஜா
முதல்வரின் செயலராக ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ராகேஷ் சந்திரா பணியாற்றினார். அவரது மறைவை தொடர்ந்து, செயலர் யாரும் நியமிக்கப்படவில்லை.சில ஆண்டுகள் இடைவெளிக்கு பின், ஐ.ஏ.எஸ்., அதிகாரி பார்த்திபன் முதல்வரின் செயலராக நியமிக்கப்பட்டார். அவர் மாற்றலாகி சென்ற பின், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக செயலர் யாரும் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில், காரைக்கால் கலெக்டராக பணியாற்றும் விக்ராந்த் ராஜா அந்த பதவியில் இருந்து மாற்றப்பட்டுள்ளார். இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அவர், முதல்வரின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காரைக்கால் கலெக்டர் அர்ஜூன் சர்மா
தகவல் தொழில்நுட்பம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளின் செயலராகவும், ஸ்மார்ட் சிட்டி மேம்பாட்டு நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாகவும் பணியாற்றும் அர்ஜூன் சர்மா, மேற்கண்ட பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, காரைக்கால் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.அவர், புதுச்சேரி பவர் கார்பரேஷன், ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஸ்பின்னிங் மில் ஆகியவற்றின் மேலாண் இயக்குனர் பதவிகளையும் கவனிப்பார்.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X