பொது செய்தி

இந்தியா

பிரெஞ்சு நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

Added : பிப் 14, 2020
Advertisement

புதுச்சேரி:பிரெஞ்சு நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாமிற்கு புதுச்சேரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:உழவர்கரை நகராட்சி, நகர வாழ்வாதார மையம், நவயுகா கன்சல்டன்சி சர்வீஸ் சார்பில், டாடா கன்சல்டன்சி சர்வீஸ், சோசித்தே ஜெனெரெல், சோப்ரா ஸ்டீரியா, சைட்டல் போன்ற பிரெஞ்சு நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த வேலைவாய்ப்பு முகாம், புதுச்சேரி சுய்ப்ரேன் வீதியில் உள்ள அலையன்ஸ் பிரான்சேஸ் வளாகத்தில், நாளை 15ம் தேதி காலை 9:00 மணி முதல், மதியம் 1 மணி வரை நடக்கிறது.இந்த முகாமில், உலகின் தலைசிறந்த நிறுவனங்களில் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு, பிரெஞ்ச் வங்கியின் கே.ஒய்.சி., - கடன் செயல்பாடு, பிரெஞ்சு உலகளாவிய சேவை மையம் போன்ற பல துறைகளில் வேலைசெய்ய முன் அனுபவம் உள்ள மற்றும் அனுபமில்லாத, பட்டம் பெற்ற, பிரெஞ்சு மொழி நன்கு பேச, எழுத தெரிந்த நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னை, பெங்களூரு, நொய்டா போன்ற மாநகரங்களில் பணியமர்த்தப்படுவர்.ஏதாவது ஒரு பட்டம் முடித்த, பிரெஞ்சு மொழியில் குறைந்தது ஏ2 முதல் பி2 அளவில் தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும் விபரங்களுக்கு, செட்டித் தெருவில் உள்ள நவயுகா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X