சட்டசபையில் 'செல்பி' எடுத்த காங்., எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை

Added : பிப் 14, 2020 | கருத்துகள் (1)
Advertisement

புதுச்சேரி:'சட்டசபை நிகழ்வின்போது, 'செல்பி' எடுத்து வாட்ஸ் ஆப்பில் பதிவிட்ட காங்., எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., வலியுறுத்தி உள்ளது.இதுகுறித்து, சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன் அளித்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சட்டசபை நிகழ்வுகள், சபையில் எம்.எல்.ஏ.க்கள் நடந்து கொள்ளும் விதம், செயல்பாடுகள், சட்டசபை நடத்தை விதிகளில் தெளிவாக வரையறுக்கப் பட்டுள்ளது. அதனடிப்படையில், சட்டசபையின் மாண்பு, மரியாதையை காப்பாற்ற வேண்டியது எம்.எல்.ஏ.க்களின் கடமை.நடத்தை விதிகள் மீறப்படும்போது கண்டித்து, நேர்வழிப்படுத்துவது சபாநாயகரின் பொறுப்பு. சட்டசபையில் இல்லாத எம்.எல்.ஏ.க்களை இழிவுபடுத்தி பேசுவதையும், உயர் பதவியில் இருப்பவர்களை ஒருமையில் பேசுவதையும் சபாநாயகர் கண்டிப்பதுடன், தவறான சொற்களை சபை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்.
கடந்த 12ம் தேதி நடந்த சட்டசபை கூட்டத்தை அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்த நிலையில், வேளாண் அமைச்சர் அ.தி.மு.க., பற்றி தவறாக விமர்சித்துள்ளார். இதை சபாநாயகர் தடுத்திருக்க வேண்டும் அல்லது அந்த வார்த்தைகளை சபை குறிப்பிலிருந்து நீக்க உத்தரவிட்டிருக்க வேண்டும்.
மேலும், சட்டசபை நிகழ்வின்போது காங்., எம்.எல்.ஏ., ஜான்குமார், தனது இருக்கையில் அமர்ந்து கொண்டு, மொபைல்போனில் 'செல்பி' எடுத்துள்ளார். அதற்கு, அனந்தராமன் எம்.எல்.ஏ., சிரித்துக் கொண்டு 'போஸ்' கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை தனது 'வாட்ஸ்ஆப்' குரூப்பில் ஜான்குமார் பதிவிட்டுள்ளார், சட்டசபை நடந்துகொண்டிருக்கும் போதே, இந்த புகைப்படங்கள் பல வாட்ஸ் ஆப் குழுக்களில் பகிரப்பட்டுள்ளது.
சபை நிகழ்வின்போது, ஆளும்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சபையின் கண்ணியத்தை சீர்குலைக்கும் விதத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொள்வதும், அதன் மீது தாங்கள் நடவடிக்கை எடுக்காததும் வருத்தம் அளிக்கிறது. மேலும், கவர்னரை சில எம்.எல்.ஏ.,க்கள் ஒருமையில் பேசும்போது தடுத்தும், அந்த வார்த்தைகளை சபை குறிப்பில் இருந்து நீக்கியும் இருக்க வேண்டும்.எனவே, அ.தி.மு.க., பற்றியும் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பற்றியும் விமர்சனம் செய்துள்ள வார்த்தைகளை சபை குறிப்பிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும். கவர்னர் பற்றிய பேசிய வார்த்தைகளையும் நீக்க வேண்டும். சட்டசபை கண்ணியத்தை சீர்குலைக்கும் விதத்தில் செயல்பட்ட ஜான்குமார் எம்.எல்.ஏ., மீது சட்டசபை நடத்தை விதிகளின் கீழ் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். .இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாலசுப்பிரமணியன் அ காங்கிரஸ் கட்சியின் வருங்காலம் எப்படி இருக்குமோ என்ற அச்சத்தில் ஒரு செல்பி எடுத்துக்கொள்வதில் என்ன தவறு ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X