பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Added : பிப் 14, 2020
Advertisement

காரைக்கால்:காரைக்காலில் உள்ள புதுச்சேரி பல்கலைக்கழக கிளையில், அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து, மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி பல்கலைக்கழக கிளை, காரைக்காலில் கடந்த 13 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு, குடிநீர், ஆய்வகம், விடுதி, தரமான உணவு, இன்டர்நெட், நுாலகம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், பல்கலை நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், கோரிக்கையை வலியுறுத்தி, மாணவர்கள் கடந்த மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.பல்கலைக்கழகத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, நேற்று மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த நகர போலீசார், மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X