பொது செய்தி

இந்தியா

கூந்தலை தானமாக வழங்கிய மாணவிகள், பேராசிரியைகள்

Added : பிப் 14, 2020
Share
Advertisement
புதுச்சேரி:புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, கல்லுாரி மாணவிகளும், பேராசிரியைகளும் தங்களது தலைமுடியை தானமாக வழங்கினர்.பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியின் நலம் ஆரோக்கிய குழுவும், ஜாய் அண்ட் கிவ்விங் தொண்டு நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த முடிதானம் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. நிகழ்ச்சியை, கல்லுாரி முதல்வர் சுப்ரமணி துவக்கி

புதுச்சேரி:புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, கல்லுாரி மாணவிகளும், பேராசிரியைகளும் தங்களது தலைமுடியை தானமாக வழங்கினர்.

பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியின் நலம் ஆரோக்கிய குழுவும், ஜாய் அண்ட் கிவ்விங் தொண்டு நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த முடிதானம் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. நிகழ்ச்சியை, கல்லுாரி முதல்வர் சுப்ரமணி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவிகளும், பேராசிரியைகளும் கலந்து கொண்டு தங்களது தலைமுடியை தானமாக வழங்கினர். தானமாக பெறப்பட்ட தலைமுடி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, நலம் ஆரோக்கிய குழு தலைவி பேராசிரியை ரஜினி மற்றும் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X