பொது செய்தி

தமிழ்நாடு

சிறுபான்மையினருக்கு ரூ.9.90 லட்சம் உதவி

Added : பிப் 14, 2020
Share
Advertisement
 சிறுபான்மையினருக்கு ரூ.9.90 லட்சம் உதவி

திருப்பூர்;பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், 145 பயனாளிகளுக்கு, 9.90 லட்சம் ரூபாய் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. டி.ஆர்.ஓ., சுகுமார் தலைமை வகித்தார். பயிற்சி துணை கலெக்டர் விஷ்ணுவர்த்தினி முன்னிலை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர் நல மாவட்ட அலுவலர் சாகுல் அமீது வரவேற்று, சிறுபான்மையினர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை விளக்கினார்.முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம், கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம், கல்வி உதவி, ஜெருசலேம் புனித பயணத்துக்கான சிறப்பு நிதி உதவி, சர்ச் புனரமைப்பு நிதி, உலமாக்கள் நலவாரியம், பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் வழங்கும் கடனுதவி திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.ஒரு பயனாளிக்கு, 10 ஆயிரம் ரூபாய் கல்வி உதவி வழங்கப்பட்டது. மேலும், 52 பயனாளிகளுக்கு, விதவை உதவித்தொகையாக, 5.20 லட்சம் ரூபாய்; முதியோர் உதவி, கணவரால் கைவிடப்பட்டவர் உதவி, சிறுதொழில் செய்வோருக்கான உதவி என, 92 பயனாளிகளுக்கு, 4.60 லட்சம் ரூபாய் என, 145 பயனாளிகளுக்கு, 9.90 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X