குண்டர் சட்டத்தில் பிரபல ரவுடி கைது

Added : பிப் 14, 2020
Advertisement

புதுச்சேரி:கோட்டக்குப்பம் அருகே தொடர் கொலை வழக்கில் ஈடுபட்ட ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

குயிலாபாளையத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் மகன் பச்சையப்பன், 26; இவர் குயிலாபாளையம் ரிலையன்ஸ் பாபு, பொம்மையார்பாளையம் உல்லாஸ், ராஜா ஆகியோரை கொலை செய்த வழக்குகளில் முக்கிய குற்றவாளி.

மேலும், வெடிகுண்டு வீசி கொலை முயற்சி வழக்கு, கத்தியை காட்டி மாமூல் கேட்டு மிரட்டியது, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி குயிலாபாளையம் பகுதியில் பச்சையப்பன் கத்தியை காட்டி கலாட்டா செய்து கொண்டிருந்தார். அப்போது ரோந்து பணியில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் அசோக்குமார் அவரை தடுக்க முயன்ற போது, நான் தாதா மணிகண்டன் கூட்டாளி. என்னையே பிடிக்க வருகிறாயா என கேட்டு சப் இன்ஸ்பெக்டரை கத்தியால் வெட்ட முயன்றார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பச்சையப்பனை கைது செய்து கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர். ரவுடி பச்சையப்பன் மீது தொடர் கொலை வழக்கு மற்றும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு எஸ்.பி., ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில், பச்சையப்பனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டதன் பேரில், கடலுார் மத்திய சிறையில் உள்ள பச்சையப்பனிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X