பொது செய்தி

தமிழ்நாடு

100 சதவீத சம்பள உயர்வு எம்.எல்.எப்., வலியுறுத்தல்

Added : பிப் 14, 2020
Advertisement

திருப்பூர்:பின்னலாடை தொழிலாளருக்கு, 100 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டுமென, எல்.பி.எப்., கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.கோவை, திருப்பூர் மாவட்ட பனியன் தொழிலாளர் முன்னேற்ற சங்க (எல்.பி.எப்.,) செயற்குழு கூட்டம், நேற்று நடந்தது. சங்க தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:பின்னலாடை நிறுவனங்களில் பீஸ் ரேட், ஷிப்ட் அடிப்படையில் பணிபுரியும், அனைத்து தொழிலாளர்களுக்கும், தற்போது வழங்கிவரும் சம்பளத்திலிருந்து, 100 சதவீதம் சம்பள உயர்வு அளிக்கவேண்டும்.மாதம்தோறும் பஞ்சப்படி 2 ஆயிரம் ரூபாய்; உயரும் ஒவ்வொரு விலைவாசி புள்ளிக்கும், 0.30 காசு வீதம் உயர்த்தி வழங்கவேண்டும். பயணப்படியை, 50 ரூபாயாக உயர்த்த வேண்டும்; எட்டு மணி நேரம் மட்டும் வேலை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.மாதம் மூவாயிரம் ரூபாய் வீட்டு வாடகை படி வழங்கவேண்டும். 250 தொழிலாளருக்குமேல் பணி அமர்த்தியுள்ள நிறுவனங்கள், தொழிலாளர் குடும்பத்துடன் வசிப்பதற்கு குடியிருப்பு வசதி ஏற்படுத்த வேண்டும். கூடுதல் வேலை நேரத்துக்கான பேட்டாவை, நுாறு சதவீதம் உயர்த்தி வழங்கவேண்டும்.பெண் தொழிலாளர்களுக்கு தனி கமிட்டி; தொழிலாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை வழங்கவேண்டும். கந்து வட்டியிலிருந்து தொழிலாளர் மீள்வதற்காக, கூட்டுறவு சிக்கன கடன் சங்கங்கள் உருவாக்கப்படவேண்டும் என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X