பொது செய்தி

தமிழ்நாடு

பரமக்குடியில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: சதன்பிரபாகர் எம்.எல்.ஏ., அழைப்பு

Added : பிப் 14, 2020
Advertisement

பரமக்குடி:பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை(பிப்.15) தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடப்பதால் மாவட்ட இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும், என்று பரமக்குடி எம்.எல்.ஏ., சதன் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து, தனியார் துறை சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது. இதில் 70க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இங்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு மற்றும் ஆள்சேர்ப்பு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு வழிகாட்டுதல், தொழில் நெறி ஆலோசனைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு அரங்கு, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை விண்ணப்பம் உள்ளிட்டவைகள் வழங்கப்படும்.

தனியார் துறையில் வேலை பெறுபவர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப் பட மாட்டாது. 8ம் வகுப்பு முதல் பி.இ., படித்த,18 முதல் 40 வயதுள்ள விருப்பமுள்ள இருபாலரும் முகாமில் கலந்து கொள்ளலாம். காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை முகாம் நடைபெறும், என பரமக்குடி எம்.எல்.ஏ., சதன்பிரபாகர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X