பொது செய்தி

இந்தியா

எம்.ஐ.டி., கல்லூரியின் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம்

Added : பிப் 14, 2020
Advertisement

புதுச்சேரி:மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் என்.எஸ்.எஸ்., திட்டத்தின் ஏழு நாள் முகாம், கல்மண்டபம் அரசு உயர் நிலைப் பள்ளியில் நடந்தது.

துவக்க விழாவில், மணக்குள விநாயகர் கல்விக் குழுமத் தலைவர் தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாரன் எம்.எல்.ஏ., செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர். மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி முதல்வர் மலர்க்கண் முன்னிலை வகித்தார்.

'ஆரோக்கியமான இந்தியாவிற்கு ஆரோக்கியமான இளைஞர்கள்' என்ற தலைப்பில் நடந்த முகாமின் முதல் நிகழ்ச்சியை தலைமையாசிரியர் தனசேகரன் துவக்கி வைத்தார்.முகாமில், பாரம்பரிய கலைகளான கரலாக்கட்டை சுற்றுதல், மல்லர்கம்பம், சிலம்பம் போன்றவை குறித்து என்.எஸ்.எஸ். மாணவர்களுக்கு ஜோதி செந்தில் கண்ணன் பயிற்சி அளித்தார். பேராசிரியை .சரஸ்வதி 'கல்வி மற்றும் மனித விழுமியங்கள்' என்ற தலைப்பில் கலந்துரையாடினார். வில்லியனுரை சுற்றியுள்ள 10 கிராமங்களுக்கு மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உதவியுடன், பொது உடல் மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.

பள்ளி மாணவர்களுக்கு நீர் சேகரிப்பு, மரம் வளர்த்தல் மற்றும் நிலத்தடி நீர் சேகரிப்பு பற்றி விளக்கப்பட்டது. திருக்காஞ்சி கெங்கைவராக நாதீஸ்வரர் கோயிலை சுத்தம் செய்து கோயில் சுற்றி மரக்கன்றுகளை நடப்பட்டன. என்.எஸ்.எஸ்., மாநில பொறுப்பு அதிகாரி குழந்தைசாமி, நேர்மறை எண்ணங்களை உருவாக்குதல் குறித்து பேசினார்.முகாமை, திட்ட அலுவலர் விஜயபிரசாத் ஒருங்கிணைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X