பொது செய்தி

தமிழ்நாடு

பழிவாங்கும் நடவடிக்கையை கைவிடுங்க! வி.ஏ.ஓ., சங்கத்தினர் வேண்டுகோள்

Added : பிப் 14, 2020
Advertisement

திருப்பூர்:கிராம நிர்வாக அலுவலர்களை பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டுமென, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.'இ-அடங்கல்' செயல்பாட்டில், வருவாய்த்துறை அதிகாரிகள், பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதாக, கிராம நிர்வாக அலுவலர்கள், நேற்று முன்தினம், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். டி.ஆர்.ஓ., சுகுமாரை சந்தித்து, இப்பிரச்னைகளுக்கு தீர்வு வழங்க வேண்டுமென முறையிட்டனர்.இரண்டாவது நாளாக நேற்றும், கிராம நிர்வாக அலுவலர் சங்க நிர்வாகிகள், டி.ஆர்.ஓ.,வை சந்தித்து பேசினர். அப்போது, தங்களது கோரிக்கையை, மனுவாக வழங்கினர்.தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க நிர்வாகிகள், டி.ஆர்.ஓ., விடம் அளித்த மனு:கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில், கிராம நிர்வாக அலுவலரை தரக்குறைவாக பேசியவர்கள் மீது, துணை கலெக்டர் சைபுதீன் நடவடிக்கை எடுத்துள்ளார்.அதேபோல், திருப்பூரிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள், மாநில சங்க முடிவுப்படி, 'இ-அடங்கல்' பணியை மேற்கொள்ள மாட்டோம். இதுகுறித்த தீர்மானத்தை, ஏற்கனவே, டி.ஆர்.ஓ., விடம் வழங்கியும், இடர்பாடுகளை நேரில் தெரிவித்தும், டி.ஆர்.ஓ., பொருட்படுத்தவில்லை.ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலரை தனித்தனியே அழைத்து, பழிவாங்கும் நோக்கில் அலைக்கழிக்கும் செயலை கைவிட வேண்டும். அடிப்படை வசதி செய்து கொடுக்காமல், கிராம நிர்வாக அலுவலருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில், பழிவாங்கும் நடவடிக்கை தொடர்ந்தால், தொடர் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X