பொது செய்தி

தமிழ்நாடு

7 ஆயிரம் சதுர அடி கட்டடம்நகராட்சியே பிளான் அப்ரூவல்

Added : பிப் 14, 2020
Advertisement

சிவகங்கை:சிவகங்கையில் 7 ஆயிரம் சதுர அடி வரை கட்டடம் கட்டுவதற்கான பிளான் அப்ரூவலை நகராட்சியிலேயே பெறலாம் என அங்கீகரிக்கப்பட்ட பொறியாளர் ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

சிவகங்கை நகராட்சியில் பொறியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கமிஷனர் (பொறுப்பு) கார்த்திகேயன் தலைமை வகித்தார். கட்டட ஆய்வாளர் திலகவதி முன்னிலை வகித்தார். பாரதிதாசன், குமார் உட்பட பதிவு பெற்ற பொறியாளர்கள் பங்கேற்றனர்.இதுவரை நகராட்சி சார்பில் 2 ஆயிரம் சதுர அடி அளவிற்கு கட்டப்படும் கட்டடங்களுக்கு மட்டுமே பிளான் அப்ரூவல் வழங்கினர். இனி அதன் விகிதாச்சாரம் 7 ஆயிரம் சதுர அடியாக உயர்த்தப்பட்டுள்ளன. அதே போன்று தரை தளம் உட்பட ஒரு மேல் மாடி கட்டடத்திற்கு மட்டுமே இங்கு அனுமதித்து வந்தனர். இனி தரைத்தளம் மற்றும் 3 மேல்மாடி வரை கட்ட நகராட்சியில் பிளான் அப்ரூவல் பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.

அங்கீகரிக்கப்பட்ட பொறியாளர் வழங்கும் வரைபடத்தின் படியே வீடுகள்,பிற தொழிற்சாலை கட்டடங்கள் கட்ட வேண்டும்.வரைபடத்தை மீறி கட்டினால் வரைபடம் கொடுத்த பொறியாளரே பொறுப்பாவார். பிளான் அப்ரூவலுக்கு நேரடியாக விண்ணப்பிக்காமல்,இனி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அனைத்து தகவலும் சரியாக இருக்கும் பட்சத்தில் 7 நாட்களுக்குள் பிளான் அப்ரூவல் வழங்கப்படும், என தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X