பொது செய்தி

இந்தியா

பிரான்ஸ் மாணவர்கள் களப்பயணம்

Added : பிப் 14, 2020
Advertisement

நெட்டப்பாக்கம்:பிரான்ஸ் நாட்டு வேளாண் மாணவர்கள், கரையாம்புத்துார் கிராமத்தில், இந்திய வேளாண் முறைகள் குறித்து களப்பயணம் மேற்கொண்டனர்.
பிரான்ஸ் நாட்டில் வேளாண்மை படிப்பு பயிலும் இறுதியாண்டு மாணவர்கள், இந்திய விவசாய முறையினை தெரிந்து கொள்வது வழக்கம். அதன்படி, இந்தாண்டு பிரான்ஸ் நாட்டு வேளாண் மாணவர்கள், கரையாம்புத்துார் கிராமத்தில் தங்கி, இந்திய வேளாண்மை முறைகள் குறித்து அறிந்து வருகின்றனர். அங்குள்ள விளை நிலங்களை பார்வையிட்டு, சாகுபடி முறைகள் குறித்து அறிந்து கொள்கின்றனர்.
கரையாம்புத்துார் உழவர் உதவியக வேளாண் அலுவலர் இளஞ்செழியன், நாற்றங்கால் விதைத்தல், இயற்கை முறையில் காய்கறி சாகுபடி போன்றவை குறித்து விளக்கினார். மாணவர்களின் கேள்விகளுக்கும் விளக்கமளித்தார். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் கங்காதுரை, களப்பணியாளர் தாவூதன், ஆத்மா திட்ட மேலாளர் பக்தவச்சலம் ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X