தமிழ்நாடு

10 ஆயிரம் பேர்!.'ஸ்மார்ட் சிட்டி' குறித்து கருத்து பதிவு:கூடுதலாக பலரும் பதிவிட அழைப்பு

Updated : பிப் 14, 2020 | Added : பிப் 14, 2020 | கருத்துகள் (3)
Advertisement
 10 ஆயிரம் பேர்!.'ஸ்மார்ட் சிட்டி' குறித்து கருத்து பதிவு:கூடுதலாக பலரும் பதிவிட அழைப்பு

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப் பணிகள் குறித்து இதுவரை 10 ஆயிரம் பேர் கருத்து பதிவிட்டுள்ளனர். இன்னும் பலர், கருத்துக் களை பதிவிட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு. நாடு முழுவதும் 100 நகரங்களைத் தேர்வு செய்து, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழகத்தில் திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட 12 மாநகராட்சிகள் தேர்வு செய்து, பல்லாயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகிறது.அவ்வகையில், திருப்பூர் மாநகராட்சியில் முதல் கட்டமாக 950 கோடி ரூபாய் மதிப்பில், 26 பணிகள் மேற்கொள்ளப்பட்டு நடந்து வருகிறது.இந்நிலையில், மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் சார்பில், இப்பணிகள் குறித்து பொதுமக்களிடம் ஆன்லைன் முறையில் கருத்து கேட்கப்படுகிறது. 'எனது நகரம்; எனது பெருமை' என்ற தலைப்பில், https://eol2019.org/citizenfeedbackஎன்ற இணைய தள முகவரியில், பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 29ம் தேதி வரை இக்கருத்துகள் பெறப்படுகிறது. அமைச்சகம் மூலம் இக்கருத்துகள் பெற்று, அது குறித்த அறிக்கை உரிய மாநகராட்சிக்கு அனுப்பி வைக்கப்படும்.திருப்பூர் மாநகராட்சியைப் பொறுத்தவரை கடந்த, 10 நாட்களில் இதுவரை, 10 ஆயிரம் பேர் தங்கள் கருத்துகளை ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் கருத்தை இதில் பதிவிட்டு, மாநகராட்சி நிர்வாகத்துக்கு உரிய ஆலோசனைகள் வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.சிறந்த ஸ்மார்ட் சிட்டி: மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம், சிறந்த, ஸ்மார்ட் சிட்டி பட்டியலை வெளியிட்டது.அந்த பட்டியலில், குஜராத்தின் ஆமதாபாத் நகரம், முதல் இடத்தை பிடித்துள்ளது. இதில், திருப்பூர், முதல் 20 இடங்களுக்குள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-பிப்-202021:02:10 IST Report Abuse
Irudayaraj Irudaya நோ
Rate this:
Share this comment
Cancel
14-பிப்-202021:02:06 IST Report Abuse
Irudayaraj Irudaya நோ
Rate this:
Share this comment
Cancel
14-பிப்-202021:02:05 IST Report Abuse
Irudayaraj Irudaya நோ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X