பல்கலை., மாணவர்களுக்கு ஆதரவாக கதிர்காமம் கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக்

Added : பிப் 14, 2020
Advertisement

புதுச்சேரி:புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக, கதிர்காமம் அரசு கலைக் கல்லுாரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

காலாப்பட்டில் உள்ள புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் கல்விக் கட்டண உயர்வை கண்டித்தும், இலவச பஸ் சேவையை தொடர்ந்து இயக்க கோரியும், மாணவர் சேர்க்கையில், அனைத்து பாடப்பிரிவுகளிலும் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தியும், மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 8ம் நாளாக போராட்டம் தொடர்ந்தது.

பல்கலை மாணவர்களுக்கு ஆதரவாக, கதிர்காமம் இந்திராகாந்தி அரசு கலை அறிவியல் கல்லுாரி மாணவ மாணவியர் நேற்று வகுப்புகளை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். 200க்கும் மேற்பட்ட மாணவ மணவியர் பேரணியாக, ராஜிவ் சதுக்கம் அருகே உள்ள கலெக்டர் அலுவலகம் வந்து, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் பிரவீன்குமார், பிரதேசக் குழு உறுப்பினர் நரேந்திரன், வாலிபர் சங்க ஆனந்த் உள்ளிட்டோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். கோரிக்கை மனுவை, கலெக்டர் அலுவலகத்தில் அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X