பொது செய்தி

தமிழ்நாடு

சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரிநிலம் தொடர்பாக கிளம்பும் சர்ச்சை கிடப்பில் ஆவணம் மாற்றும் பணி

Added : பிப் 14, 2020
Advertisement

சிவகங்கை:சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி கட்டி 7 ஆண்டுகளை கடந்தும், வருவாய் துறை ஆவணத்தில் அரசு புறம்போக்கு நிலம் என இருப்பதால், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 2011ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி, சிவகங்கையில் அரசு மருத்துவ கல்லுாரி திறக்கப்படும் என அறிவித்தார். அப்போதைய கலெக்டர் பங்கஜ்குமார் பன்சால் உத்தரவுப்படி, 30 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை கையகப்படுத்தினர். அங்கு மருத்துவ கல்லுாரி, மருத்துவமனை, மாணவர்கள் விடுதிக்கான கட்டுமான பணி முடிந்து, 2012-- 13 ம் கல்வி ஆண்டு முதல் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

அரசு புறம்போக்கு நிலத்தை குறிப்பிட்ட துறைக்கு ஒப்படைத்த பின், வருவாய்துறை ஆவணங்களின் 'அ', பதிவேட்டில் அந்த நிலத்தை மருத்துவ கல்லுாரி பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டும்.சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி: ஆனால், இதற்கான முயற்சியில் மாவட்ட நிர்வாகம், தமிழக சுகாதாரத்துறை அக்கறை காட்டவில்லை. தொடர்ந்து கல்லுாரி துவங்கி 7 ஆண்டுக்கு மேலாகியும், மருத்துவ கல்லுாரி மருத்துவமனை இயங்கி வரும் இடம் அரசு புறம்போக்கு நிலம் என, வருவாய்துறை ஆவணத்தில் 'அ' பதிவேட்டில் இருப்பதால், சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

வருவாய்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, அரசு புறம்போக்கு நிலத்தை, பிற துறைக்கு ஒப்படைத்ததும் உடனுக்குடன் வருவாய்துறை ஆவணங்களில், அத்துறை பெயருக்கு இடத்தை மாற்றி அமைத்து, 'அ' பதிவேட்டில் குறிக்க வேண்டும். ஆனால், தொடர்ந்து 7 ஆண்டுகளாக பெயர் மாற்றம் செய்யப்படாமல் விட்டதால், வாணியங்குடி ஊராட்சி நிர்வாகத்திற்கு, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கட்டடத்திற்கான வரி செலுத்தப்படாமல் உள்ளது.

இது வாணியங்குடி ஊராட்சிக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் 'அ' பதிவேட்டில் கல்லுாரி பெயரில் பதிவு செய்து, அதற்கான ஆவணங்கள் டீன் வசம் ஒப்படைக்கப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X