பொது செய்தி

தமிழ்நாடு

என்.ஜி.ஆர்., ரோடு ஆக்கிரமிப்பு

Added : பிப் 14, 2020
Advertisement
 என்.ஜி.ஆர்., ரோடு ஆக்கிரமிப்பு

பல்லடம்:வரும் 25ம் தேதிக்குள், பல்லடம் என்.ஜி.ஆர்., ரோடு ஆக்கிரமிப்புக்கு தீர்வு ஏற்படுத்தப்படும் என, வியாபாரிகள் உடனான பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டது.பல்லடத்தில் பொதுமக்கள் கூடும் முக்கிய இடமாக என்.ஜி.ஆர்., ரோடு உள்ளது. ஆக்கிரமிப்புகள் காரணமாக, பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் ஏற்படும் நெரிசலால், பொதுமக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.வியாபாரிகளின் ஒத்துழைப்பு இல்லாததால், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை, வெறும் கானல் நீராக இருந்து வந்தது.நகராட்சி கமிஷனர் கணேசன், ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையாக, வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். நேற்று, பல்லடம் வைஸ் மண்டபத்தில், எம்.எல்.ஏ., நடராஜன் தலைமையில், பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. நகராட்சி கமிஷனர் கணேசன், டி.எஸ்.பி., முருகவேல், இன்ஸ்பெக்டர் சுஜாதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.'வாழ்வாதாரமே என்.ஜி.ஆர்., ரோடு'''நடைபாதை கடைகள், தள்ளுவண்டி, ஆட்டோக்கள் என, ஏராளமான கடைகள், ரோட்டுக்கு வந்துவிட்டன. பண்டிகைகளின் போது, கூடுதலாக வரும் ரோட்டு கடைகளால், ரோடு பத்து அடியாக மாறிவிடுகிறது.அவசர காலங்களில் ஆம்புலன்ஸ்களும் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. என்.ஜி.ஆர்., ரோடே எங்களின் வாழ்வாதாரமாக உள்ளதால், வியாபாரம் இன்றி, கடை வாடகையை கட்ட முடியாமல் கடன் வாங்கும் நிலை உள்ளது. எனவே, பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சரக்கு போக்குவரத்துக்கு நேரம் நிர்ணயிக்க வேண்டும். நுாற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ள என்.ஜி.ஆர்., ரோட்டில், கழிப்பிடம், பார்க்கிங் வசதி கிடையாது. வியாபாரிகள் பொதுமக்களுக்கான தண்ணீர் வசதியும் இல்லை. குப்பை கிடங்கு, தேங்கி கிடக்கும் சாக்கடையால் கடும் அவதிப்பட்டு வருகிறோம்'' என்கின்றனர், வியாபாரிகள்.அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்ட அதிகாரிகள், 'வியாபாரிகள் சங்கம், அண்ணா வணிக வளாக வியாபாரிகள், தினசரி மார்க்கெட் வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள், மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் என, ஐந்து குழுவிலும், தலா இரண்டு பேர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவர். பொதுமக்களுக்கு இடையூறு இன்றி, ஒதுக்கப்படும் இடத்தை பயன்படுத்தி வியாபாரம் மேற்கொள்ள வேண்டும். பொறுப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தகவல் அளிக்கப்படும். பிப்., 25க்குள், என்.ஜி.ஆர்., ரோடு ஆக்கிரமிப்பு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்' என அறிவித்தனர். என்.ஜி.ஆர்., ரோடு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, அனைத்து தரப்பினரும் ஒருமித்த கருத்தை தெரிவித்ததால், பேச்சுவார்த்தை கூட்டம் சுமூகமாக முடிந்தது.கடையடைப்புவியாபாரிகளுடனான பேச்சுவார்த்தை கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தினசரி மார்க்கெட் வியாபாரிகள், என்.ஜி.ஆர்., ரோடு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, நேற்று ஒருநாள் கடைகளை அடைத்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X