பொது செய்தி

தமிழ்நாடு

பாலம் கட்டுமான பணி

Added : பிப் 14, 2020
Share
Advertisement

திருப்பூர்:பாலம் பணியின்போது மின் கம்பி அறுபட்டதால், பாரப்பாளையம் சுற்றுப்பகுதிகளில் நேற்று ஐந்து மணி நேரம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.திருப்பூர்-மங்கலம் ரோடு மற்றும் காலேஜ் ரோட்டை இணைக்கும்வகையில், தீபம் பவுண்டேசன் சார்பில், பாரப்பாளையம் முதல் ராயபுரம் வரை, நொய்யலாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டப்படுகிறது. நொய்யலாற்றின் குறுக்கே 30 மீட்டர் நீளம்; 12 மீட்டர் அகலத்தில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணி நடந்துவருகிறது.இதற்காக, பாரப்பாளையத்தில் நேற்று, பொக்லைன் இயந்திரம் மூலம், குழி தோண்டப்பட்டது. அப்போது, மண்ணில் புதைக்கப்பட்டிருந்த மின் கம்பி அறுபட்டது.இதனால், பாரப்பாளையம் சுற்றுப்பகுதிகளில் மாலை, 5:00 மணிக்கு மின் சப்ளை துண்டிக்கப்பட்டது.இரவு, 9:00 மணி வரை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பின்னரே, மின் இணைப்பு கொடுக்கப்பட்டது.தொடர்ந்து ஐந்து மணி நேரம் வரை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், அப்பகுதி பொதுமக்கள், தொழில் துறையினர் மிகவும் சிரமப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X