பொது செய்தி

தமிழ்நாடு

ஹைக்கூ கவிதை சொல்லும்... சிறைச்சாலை மதிலை தாண்டிகிளை நீட்டுகிறது...கைதிகள் நட்ட மரம்!

Added : பிப் 14, 2020
Advertisement
 ஹைக்கூ கவிதை சொல்லும்...  சிறைச்சாலை மதிலை தாண்டிகிளை நீட்டுகிறது...கைதிகள் நட்ட மரம்!

மெல்லிய உணர்வுகளை, எளிமையாக சொல்லும் சிறிய ஜப்பானிய கவிதை வடிவம் ஹைக்கூ. ஜப்பானிய கவிஞர்களான மோரிடேகே, சோகன் ஆகியோர் ஹைக்கூ கவிதையின் முன்னோடிகள். தமிழுக்கு பாரதியால் ஹைக்கூ அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, இதை யாரும் கவனிக்கவில்லை. புதுக்கவிதைகள்தான் எழுதினர்.தமிழில், 1980ம் ஆண்டுக்கு பிறகு, பல கவிஞர்கள்ஹைக்கூ கவிதைகள் எழுத துவங்கினர்.
ஜப்பானிய ஹைக்கூவின் உண்மையான அடிப்படையை புரிந்து கொள்ளாமல், துணுக்குகள், ஜோக்குகள் போல், போலியாக பலர் எழுதியதால், ஹைக்கூவின் உன்னதமான வடிவம் நீர்த்துப்போனது.ஹைக்கூவின் இயல்பான கவித்துவத்தை நேசிக்கும் வாசகர்கள், போலியான ஹைக்கூக்களை ஒதுக்கி தள்ளியதால், 2000ம் ஆண்டுக்கு பிறகு, ஹைக்கூ எழுதுபவர்கள் வெகுவாக குறைந்தனர்.இந்நிலையில்தான், கோவையை சேர்ந்த கவிஞர் நிலா கிருஷ்ணமூர்த்தியின் 'மணல் நதியும் சில கூழாங்கற்களும்' என்ற ஹைக்கூ கவிதை தொகுப்பு வெளிவந்துள்ளது.

வெளியீடு: அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், விலை 90 ரூபாய்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X