பொது செய்தி

தமிழ்நாடு

முள்ளங்கி விலை ஏறலை... விவசாயிகள் கவலை தீரலை! 

Added : பிப் 14, 2020
Advertisement
 முள்ளங்கி விலை ஏறலை...  விவசாயிகள் கவலை தீரலை! 

பேரூர்:முள்ளங்கி விலை கடும் வீழ்ச்சியடைந்து வருவதால், விவசாயிகள் விரக்தியின் உச்சத்தில் உள்ளனர்.தொண்டாமுத்துார் வட்டாரத்தில் சின்ன வெங்காயம், தக்காளி, கத்தரி, வெண்டை உள்ளிட்ட காய்கறி வகைகள் சாகுபடியாகின்றன. இத்துடன், மலைப்பிரதேசங்களில் விளைவிக்கப்படும் முள்ளங்கி, காலிபிளவர், பீட்ரூட்டும் கணிசமாக சாகுபடி செய்யப்படுகிறது.கடந்த ஆண்டு இறுதியில், ஒரு கிலோ முள்ளங்கி, ரூ.35 வரை கொள்முதல் செய்யப்பட்டது. இந்நிலையில், விளைச்சல் அதிகரித்ததால், விலை வீழ்ச்சியடைய துவங்கியது.நேற்று, விவசாயிகளிடம் இருந்து கிலோ, 3 - 5 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. விலை தொடர்ந்து சரிந்து வருவதால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.முள்ளங்கி விவசாயிகள் சிலர் கூறுகையில், 'ஏக்கருக்கு, 5 கிலோ முள்ளங்கி விதைகளை நடவு செய்தால், 7 முதல், 9 டன் வரை மகசூல் கிடைக்கும். தற்போது, பரவலாக முள்ளங்கி சாகுபடி அதிகரித்துள்ளது. இதனால், விலை கடும் வீழ்ச்சியடைந்து வருகிறது.ஒரு மாதமாக, அதிகபட்ச விலை, 6 ரூபாயாக உள்ளது. ஏக்கருக்கு, 40 ஆயிரம் வரை செலவிட்டு, ஆட்கள் கூலி கூட கொடுக்க முடிவதில்லை. அனைத்து காய்கறிகளின் விலையும் சரிந்து வருகிறது. எந்த பயிரை சாகுபடி செய்வது என்றே தெரியவில்லை' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X