பொது செய்தி

தமிழ்நாடு

வன மரபியல் நிறுவனத்தில் பசுமை திறன் மேம்பாட்டு பயிற்சி

Added : பிப் 14, 2020
Advertisement

கோவை:கோவை வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில், பசுமை திறன் மேம்பாட்டு பயிற்சி தொடங்கியுள்ளது.மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் பசுமை திறன் மேம்பாட்டு திட்டம், இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறவும், சுய தொழில் செய்ய உதவும் நோக்கத்துடனும் உருவாக்கப்பட்டது. இதன்படி, கோவை வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின், 'என்விஸ்' மையத்தில் தரமான நடவுபொருள் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.மரப்பெருக்கு நிறுவன இயக்குனர் டாக்டர் முருகேசன், ஒரு மாத கால பயிற்சியை தொடங்கி வைத்தார். 'என்விஸ்' மைய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கண்ணன் வாரியர், இந்த பயிற்சியின் தொடர்பு அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.பயிற்சிக்கான கல்வித்தகுதி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே. பயிற்சியானது, 30 சதவீதம் வகுப்பறையிலும், 70 சதவீதம் செய்முறை பயிற்சியாகவும் அளிக்கப்படுகிறது.பயிற்சி பெறுபவர்களுக்கு, மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படுகிறது. பயிற்சி, தங்குமிடம், உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.'இந்த பயிற்சி பெற்ற 16 பேரில், 6 பேர், சொந்தமாக நாற்றுப்பண்ணை தொடங்கியுள்ளனர். ஒருவர் உயிரி உரம் வினியோக பணியை தொடங்கியுள்ளார்' என்று, பயிற்றுனர்கள் தெரிவித்தனர்.இம்மையத்தில், வன பூச்சியியல், பூச்சி கட்டுப்பாடு, திசு கல்ச்சர் தொழில்நுட்பம் ஆகியவை குறித்த பயிற்சி, சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 64 இளைஞர்கள் இதுவரை பயிற்சி பெற்றுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X