உயர் மின் கோபுர மின் விளக்குகள் இல்லை: நான்கு வழி சாலையில் விபத்து அதிகரிப்பு

Added : பிப் 14, 2020
Advertisement

சிவகங்கை:மதுரை-- ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை வரையிலான 4 வழிச்சாலையில் சிலைமான், திருப்புவனம், மணலுார் உள்ளிட்ட இடங்களில் 'உயர் மின்கோபுர விளக்கு' இன்றி விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தமிழக அரசு பரிந்துரையின் படி மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றம் செய்து, அதற்கான ரோடு அகலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாநில நெடுஞ்சாலை எண் 29ல் உள்ள தஞ்சாவூர் முதல் சாயல்குடி வரையிலான சாலை புதுப்பிக்கப்பட்டும், தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்படவில்லை.

மாநில சாலை எண் 34ல் உள்ள ராமநாதபுரம் முதல் மேலுார், மாநில சாலை எண் 35ல் உள்ள காரைக்குடி - திருப்புத்துார் - சிங்கம்புணரி - திண்டுக்கல் ரோடு போன்றவற்றை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இன்னும் மாற்றி அமைக்கவில்லை. இதனால், வாகன போக்குவரத்திற்கேற்ப ரோடு வசதியின்றி வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

செயல்படாத தேசிய நெடுஞ்சாலை திட்டம்:தேசிய நெடுஞ்சாலை எண் 210 ல் உள்ள திருச்சி - காரைக்குடி - ராமேஸ்வரம் வரை செல்லும் ரோட்டில் காரைக்குடி அருகே கோவிலுார், மானகிரியில் 'தானியங்கி சிக்னல்' செயல்படவில்லை. மானாமதுரை - மன்னார்குடி தேசிய நெடுஞ்சாலை எண் 85 உடன் இணைக்கும் விதமாக சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரிக்கு 750 மீட்டர் துாரத்திற்கு ரோடு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், கல்லுாரி துவங்கி 8 ஆண்டுகளான நிலையிலும் , இந்த இணைப்பு ரோடு போடப்படவில்லை. மதுரை - மேலுார் - காரைக்குடி வரையிலான தேசிய நெடுஞ்சாலை எண் 383 ரோட்டை மாற்றி அமைக்கும் பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துவக்கப்படவில்லை.

உயர் கோபுர மின்விளக்கு இன்றி ஆபத்து:தேசிய நெடுஞ்சாலை எண் 49ல் மதுரை - திருப்புவனம் - ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை வரை செல்லும் நான்கு வழிச்சாலையில் படமாத்துார் விலக்கு, பாப்பான்குளம், வன்னிக்கோட்டை, திருப்புவனம், மணலுார், பசியாபுரம், கீழடி மற்றும் சிலைமான் சந்திப்பு ரோடுகளில் கட்டாயம் உயர் மின்கோபுர விளக்கு பொருத்த வேண்டும். இங்கு மின்விளக்கு வசதியின்றி இரவில் அடிக்கடி விபத்து நேரிடுகிறது.

இதை தவிர்க்க உயர் மின்கோபுர விளக்கும் அமைக்க வேண்டும் என சிவகங்கை எம்.பி.,யிடம் கோரிக்கை அளித்துள்ளனர்.நிதின் கட்காரிக்கு எம்.பி., கடிதம்எம்.பி., கார்த்தி கூறியதாவது, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் கிடப்பில் உள்ள ரோடு திட்டங்கள் குறித்து, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்காரிக்கு கடிதம் அனுப்பியுள்ளேன், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X