பொது செய்தி

தமிழ்நாடு

கோடை துவங்கியது வாய்க்கால் வறண்டது

Added : பிப் 14, 2020
Advertisement
 கோடை துவங்கியது வாய்க்கால் வறண்டது

தொண்டாமுத்துார்:கோடை காலம் துவங்கியதால், நொய்யல் ஆற்றில் நீர்வரத்து குறைந்து, வாய்க்கால் வறண்டு காணப்படுகிறது.கோவை மண்டலத்தின், முக்கிய நீராதாரமாக நொய்யல் ஆறு விளங்கி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து, ஆயிரக்கணக்கான ஓடைகள் இணைந்து, நொய்யல் ஆறு உருவாகி வருகிறது. நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையாக, சித்திரைச்சாவடி தடுப்பணை உள்ளது.சித்திரைச்சாவடி தடுப்பணையில் இருந்து, நொய்யல் ஆறு, மேல் சித்திரைச்சாவடி வாய்க்கால், கீழ் சித்திரை சாவடி வாய்க்கால் எனப்படும் தொண்டாமுத்துார் வாய்க்கால் என, மூன்றாக பிரிகிறது. இவற்றில் இருந்தெல்லாம் கோவையில் உள்ள குளங்கள் மற்றும் குட்டைகளுக்கு நீர் பாய்கிறது.கடந்தாண்டு, 5 முறைக்கு மேல், நிரம்பி வழிந்தது. கடந்த, 3 மாதமாக, மழை பெய்யாததால், நீர் ஆற்றில் நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. இதனால், சித்திரைச்சாவடி தடுப்பணையில் இருந்து, தொண்டாமுத்தூர் வாய்க்காலுக்கு, நீர்வரத்து முற்றிலும் குறைந்து, வாய்க்கால்கள் வறண்டு காணப்படுகிறது.இனி கோடை மழையை மட்டுமே, இப்பகுதி விவசாயிகள் நம்பியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X