சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்

Added : பிப் 14, 2020
Advertisement

பாலியல் தொந்தரவுவாலிபர் மீது வழக்கு

சிவகங்கை: காளையார்கோவிலில் பத்தாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கியவர் மீது 'போக்சோ' சட்டத்தில் சிவகங்கை மகளிர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.காளையார்கோவில் அருகே தவசுகுடியை சேர்ந்தவர் இளவரசன் 27. இவரது உறவு பெண் 10ம் வகுப்பு மாணவி. ஜன.,5ம் தேதி பகல் 1:00 மணிக்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மாணவியின் வீட்டிற்கு சென்ற இளவரசன், மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதனையடுத்து அம்மாணவி 40 நாள் கர்ப்பமானதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மாணவி சிவகங்கை மகளிர் போலீசில் புகார் செய்தார். எஸ்.ஐ., விஜயா, தவசுகுடியை சேர்ந்த இளவரசன் மீது 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிந்துள்ளார்.

ஊழியருக்கு கத்திக்குத்து:தாய், மகன் கைது

சிவகங்கை: சிவகங்கை அருகே பிரவலுாரை சேர்ந்தவர் சண்முகபழனி 30. இவரால் வாய் பேச முடியாது. ஒக்கூரில் உள்ள பெட்ரோல் பங்கில் பணிபுரிகிறார். இதே பங்கில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் அதே ஊரை சேர்ந்த ரவீந்திரன் மகன் ஆரோக்கியராஜ் 27, பணிபுரிந்தார். ஆரோக்கியராஜை அடிக்கடி மிரட்டி சண்முக பழனி பணம் பெற்று வந்துள்ளார். இதில் ஏற்பட்ட பிரச்னையில் பெட்ரோல் பங்கில் இருந்து நிறுத்தப்பட்டார். இந்நிலையில் பிப்.,12 ம் தேதி வீட்டில் இருந்த ஆரோக்கியராஜிடம், சண்முகபழனி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் ஆரோக்கியராஜ், அவரது தாய் அந்தோணியம்மாள் ஆகியோர் கத்தியால் குத்தினர். வயிற்றில் காயமுற்ற சண்முகபழனியை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இன்ஸ்பெக்டர் சீராளன், மதகுபட்டி எஸ்.ஐ., ரஞ்சித் ஆகியோர் வழக்கு பதிந்து தாய், மகனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X