பொது செய்தி

தமிழ்நாடு

'எங்கள் சந்தை' திட்டம் துவக்கம்

Added : பிப் 14, 2020
Advertisement

கிணத்துக்கடவில் உள்ள, ஈஸ்வர் இன்ஜினியரிங் கல்லுாரியில், 'எங்கள் சந்தை' திட்டம் துவக்கப்பட்டுள்ளது.கல்லுாரியில் பயிலும் மாணவ, மாணவியர் கல்லுாரி வளாகத்தில், காய்கறிக்கடை அமைத்து, தங்கள் வீடு மற்றும் விவசாய நிலங்களில் விளைந்த காய்கறிகள், கீரைகள், பழங்கள், வாத்து முட்டை, நாட்டுக்கோழி முட்டை உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்களை, விற்பனைக்காக வைத்தனர். கல்லுாரி இயக்குனர் ராஜாராம் கூறுகையில், ''கல்லுாரி என்றால் படிப்பு தான் முக்கியம். அதே வேளையில் சமூக, குடும்ப சூழ்நிலைகளிலும் அவர்கள் தங்களை தயார்படுத்தி வாழ வேண்டியது அவசியம். அந்த வகையில், நாம் உட்கொள்ளும் உணவு பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான், இந்த சந்தை திட்டம்,'' என்றார். கல்லுாரி முதல்வர் சுதாமோகன்ராம், தொழில்துறை நல்லுறவு இயக்குனர் கண்ணன் நரசிம்மன், 'டீன்' கருப்புசாமி, நிர்மலா, துறை தலைவர்கள் மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.தொழில்நுட்ப, கலாசார போட்டிசின்னியம்பாளையம், ஸ்ரீ சக்தி இன்ஜி., கல்லுாரியில் மூன்று நாட்கள் நடத்தப்பட்ட தொழில்நுட்ப மற்றும் கலாசார போட்டிகளில், பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். பிளிட்ஸ் பிராஜக்ட், டிரீம் பார்ம், டெக் ரிலே, ட்ரிக்கி சர்க்யூட், ஸ்டீரிக் ஆர்ட், பிராஜக்ட் எக்ஸ்போ, காகித வினக்காட்சி, டூ இட் யுவர்செல்ப் உட்பட பல்வேறு வகையான போட்டிகள் துறைரீதியாக நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.தமிழ்நாடு இன்ஜி., கல்லுாரியில் பட்டமளிப்பு விழாகருமத்தம்பட்டியில் உள்ள, தமிழ்நாடு இன்ஜினியரிங் கல்லுாரியின், 32வது பட்டமளிப்பு விழா மற்றும் தமிழ்நாடு கட்டடக்கலை கல்லுாரியின், 9ம் ஆண்டு பட்டமளிப்பு விழா, கல்லுாரி வளாகத்தில் நடந்தது.கல்லுாரி தலைவர் ரவி தலைமை வகித்தார். திருச்சி பாரதிதாசன் பல்கலை முன்னாள் துணைவேந்தர் மீனா பேசுகையில், ''படிப்புக்கு முற்றுப்புள்ளி என்பதே கிடையாது. வாழ்நாள் முழுவதும் எதையாவது படித்து, நம் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்,'' என்றார்.இளங்கலை இன்ஜினியரிங்கில், 450, முதுகலை மற்றும் 70 கட்டடக்கலை மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. கல்லுாரி தலைமை செயல் அலுவலர் அனுஷா, கல்லுாரி முதல்வர் கார்த்திகேயன், தமிழ்நாடு கட்டடக்கலை கல்லுாரி இயக்குனர் பேராசிரியர் சுரேஷ் மற்றும் துறைத் தலைவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X