மாவட்ட கிரிக்கெட் போட்டி என்.ஐ.ஏ., அபாரம்

Added : பிப் 14, 2020
Advertisement

கோவை:மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், நடந்த மூன்றாவது டிவிஷன், 'லீக்' கிரிக்கெட் போட்டியில், என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்கள் அணி, 113 ரன்கள் வித்தியாசத்தில், சூர்யபாலா கிரிக்கெட்டர்ஸ் அணியை வென்றது.கிரிக்கெட் சங்கம் சார்பில், கோவை மாவட்டத்தில் உள்ள, கிரிக்கெட் கிளப்களுக்கு இடையேயான 'லீக்' போட்டி, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி மைதானத்தில் நடந்த, மூன்றாவது டிவிஷனுக்கான போட்டியில், என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்கள் அணியும், சூர்யபாலா கிரிக்கெட்டர்ஸ் அணியும் விளையாடின.முதலில் 'பேட்' செய்த, என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்கள் அணி, 44.5 ஓவர்களில், அனைத்து விக்கெட்களையும் இழந்து, 213 ரன்கள் அடித்தது.இந்த அணியின், அசோக்குமார் (56) அரைசதம் அடித்தார். சூர்யபாலா கிரிக்கெட்டர்ஸ் அணியின், கோபாலகிருஷ்ணன், 5 விக்கெட்களையும், அபுதாகீர், 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.'சேஸ்' செய்த, சூர்யபாலா கிரிக்கெட்டர்ஸ் அணி, 21.5 ஓவர்களில், 100 ரன்களுக்கு 'ஆல்-அவுட்' டாகி, 113 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.இந்த அணியின், ரூபன் விநாயக் (50) அரை சதம் அடித்தார். என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்கள் அணியின் அசோக்குமார், 5 விக்கெட்களும், அருண்குமார், 3 விக்கெட்களும் வீழ்த்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X