பொது செய்தி

தமிழ்நாடு

இனி பொம்மலாட்டம் பாடம் சொல்லித்தரும்! வண்ணத்துப்பூச்சிகள் தான் நாங்கள்

Added : பிப் 14, 2020
Advertisement
 இனி பொம்மலாட்டம் பாடம் சொல்லித்தரும்!  வண்ணத்துப்பூச்சிகள் தான் நாங்கள்

கிள்ளி எறிந்து விட்டன பள்ளிக்கூடங்கள்!

மூன்று வயதில் இருந்தே துவங்கும் கல்வி திணிப்பு, இளமையை முழுமையாக கபளீகரம் செய்வதை, இதை விட அழகாக சொல்ல முடியாது.நன்னெறியை கற்று தர வேண்டிய கல்விமுறை, சற்று திசை மாறி, ஒவ்வொரு குழந்தையின் முதுகிலும் இப்போதே, கலெக்டர், டாக்டர், இன்ஜினியர் என, பணி சார்ந்த முத்திரைகள் குத்தப்பட்டு விடுகின்றன.பாதை மாறி சென்று விட்ட கற்பித்தல் முறையை, மீண்டும் பாரம்பரிய கலாசார வழி கொண்டு வரும் நோக்கில், முனைப்புடன் செயல்படுகிறது, மத்திய அரசின் கலாசார வள பயிற்சி மையம்.தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு, பாரம்பரிய கலையின் வழியாக, பாடத்திட்டம் கற்பிப்பது குறித்து, ஆண்டுதோறும் இம்மையம் சார்பில், 15 நாட்கள் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
சமீபத்தில், ஐதராபாத்தில் உள்ள இம்மையத்தில்,இப்பயிற்சியை முடித்து திரும்பிய, சின்னமேட்டுப்பாளையம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை ஜெயந்தியிடம் பேசினோம்...''ஒன்பது மாநிலங்களில் இருந்து, 67 ஆசிரியர்களுக்கு, 15 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து, எட்டு பேர் பங்கேற்றோம். கோவையில், என்னோடு, மூலந்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் பரமேஸ்வரனும் பங்கேற்றார்.
பாடத்திட்டத்தை பொம்மலாட்ட கலையின் மூலம், மாணவர்களுக்கு சொல்லி கொடுப்பதே, இந்த பயிற்சியின் நோக்கம். விரல், மாஸ்க், கிளவுஸ், பேப்பர் உள்ளிட்ட ஆறு வகைபொருட்கள் கொண்டு, பொம்மலாட்ட கலை கற்பிக்கப்பட்டது.எந்த பாடத்தையும், மணிக்கணக்கில் சொல்லித் தருவதை விட, கதையாகவோ அல்லது முகப்பாவனைகள், பொம்மலாட்டம் மூலமாகவோ சொல்லி கொடுப்பதன் மூலம், எளிதில் மாணவர்கள் மனதில் பதியும்.மனப்பாடம் செய்விக்கும் மனநிலையில் இருந்து, கற்பனை வளத்தை உருவாக்கும் வகையில், வகுப்பறை செயல்பாடுகளை மாற்ற வேண்டும். வகுப்பறை செயல்பாடுகளை, இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறந்த வகுப்பறைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளதால், களப்பணியில் தீவிரமாக இறங்கியுள்ளோம்,'' என்றார்.மத்திய அரசின் கலாசார வள பயிற்சி மையத்தின் நோக்கம், பாரம்பரிய கலையை, பாடத்திட்டத்தில் இணைத்து கற்பிப்பதே. இப்பயிற்சியை, அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்க, ஏற்பாடுகள் நடக்கின்றன.
ஆர்வமுள்ள ஆசிரியர்கள், 94867 75780 என்ற எண்ணில் அழைக்கலாம். அனைவரும் இணைந்து மாற்றத்துக்கான விதையை துாவுவோம்.ஜெயந்திஆசிரியை, மூலந்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.எந்த பாடத்தையும், மணிக்கணக்கில் சொல்லித் தருவதை விட, கதையாகவோ அல்லது முகப்பாவனைகள், பொம்மலாட்டம் மூலமாகவோ சொல்லி கொடுப்பதன் மூலம், எளிதில் மாணவர்கள் மனதில் பதியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X