'ஓசி' பீர் கொடுத்தவர்களை தாக்கியவர்களுக்கு வலை

Added : பிப் 14, 2020
Advertisement

புதுச்சேரி;ஓசியில் பீர் வாங்கி குடித்துவிட்டு, சவுக்கு கட்டையால் தாக்கிய இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, மூலக்குளம் ஜே.ஜே. நகர் 3வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராமசாமி, 28. டிரைவர். இவர், நேற்று முன்தினம் இரவு 7.00 மணியளவில், முதலியார்பேட்டையில் உள்ள புது பாலத்தில், நண்பர்கள் குமார், பாலமுருகன், அருண்குமார் ஆகியோருடன் மது குடித்துக் கொண்டு இருந்தார்.அவர்கள் எதிரே, முதலியார்பேட்டை டி.எம். நகரை சேர்ந்த அருண், தனது நண்பர்களுடன் மது குடித்துக் கொண்டிருந்தார்.
அருண் தலைமையிலான கும்பல், ராமசாமியிடம் வந்து, மது பாட்டில் கேட்டு மிரட்டினர். பயந்துபோன ராமசாமி தரப்பினர், 500 ரூபாய்க்கு பீர், பிராந்தி வாங்கி வந்து கொடுத்துள்ளனர்.தொடர்ந்து, அருண் தலைமையிலான கும்பல், நீங்கள் எந்த ஊர், எதற்கு இங்கு வந்தீர்கள் என கேட்டு, சவுக்குட்டையால் சரமாரியாக தாக்கியதில் ராமசாமி, குமார் மயங்கி விழுந்தனர். உடனிருந்த நண்பர்கள் இருவரையும் மீட்டு, அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.இதுகுறித்த புகாரின்பேரில் முதலியார்பேட்டை அருண் 25, வாணரப்பேட்டை பிரவீன்,25, ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X