கட்டணம் செலுத்தாத வீடுகளில் மின் இணைப்பு துண்டிப்பு

Added : பிப் 14, 2020
Advertisement

திருக்கனுார்:செட்டிப்பட்டு கிராமத்தில் மின் கட்டண பாக்கி செலுத்தாத வீடுகளின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன..
திருக்கனுார் மின்துறை இளநிலை பொறியாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட கூனிச்சம்பட்டு, செட்டிப்பட்டு, மணலிப்பட்டு, கொடாத்துார், கே.ஆர்.பாளையம், மணவெளி, திருக்கனுார் உள்ளிட்ட பகுதிகளில், வீடுகளில் மின் பாக்கி வைத்துள்ளவர்கள் உடனடியாக மின் கட்டணத்தை செலுத்த வேண்டும்.தவறினால், மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மின்துறை அறிவித்திருந்தது.
அதன்படி, மின் கட்டண பாக்கி செலுத்தாத வீடுகளில் மின் இணைப்பை துண்டிக்கும் பணியில் மின் துறை ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர். முதற்கட்டமாக, செட்டிப்பட்டு கிராமத்தில், உதவி பொறியாளர் உத்தரவின் பேரில், இளநிலை பொறியாளர் சக்திவேல் தலைமையில், மின்பாக்கி செலுத்தாத வீடுகளின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. அனுமதியின்றி வீடுகளுக்கு மின் இணைப்பு எடுத்திருந்ததை கண்டுபிடித்து, மின் ஒயர்களை பறிமுதல் செய்தனர்.
பொதுமக்கள் உடனடியாக மின்பாக்கியை செலுத்தி மின் இணைப்பு துண்டிப்பை தவிர்க்கவும், அதிக மின்பாக்கி வைத்துள்ளவர்கள் மின்துறை தலைமை அலுவலகத்தை அணுகி தவணை முறையில் மின்பாக்கியை செலுத்துமாறும் மின்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X