விதிமீறி போர்வெல் அமைத்து, தண்ணீர் விற்பனை மாஜி தாசில்தார் உண்ணாவிரத போராட்டம் | Dinamalar

விதிமீறி போர்வெல் அமைத்து, தண்ணீர் விற்பனை 'மாஜி' தாசில்தார் உண்ணாவிரத போராட்டம்

Added : பிப் 14, 2020 | கருத்துகள் (1)
Share

பாகூர்:விதிகளை மீறி போர்வெல் அமைத்து, தண்ணீர் விற்பனை செய்யப்படுவதை தடுக்காததை கண்டித்து, ஓய்வு பெற்ற தாசில்தார், பாகூர் தாசில்தார் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
பாகூர் அடுத்த குருவிநத்தம் ஏரிக்கரையில் தனி நபர் ஒருவர் விதிகளை மீறி, போர்வெல் அமைத்து, தண்ணீரை விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இந்த போர்வெல்லை மூடக் கோரி, சோரியாங்குப்பத்தை சேர்ந்த, கடலுாரில் தாசில்தாராக பணியாற்றி ஓய்வு பெற்ற ராமலிங்கம், 66; என்பவர், கடந்த 2017ம் ஆண்டு, கவர்னர் கிரண்பேடியிடமும், புதுச்சேரி நிலத்தடி நீர் அதிகார அமைப்பிடமும் புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட நிலத்தடி நீர் அதிகார அமைப்பு அதிகாரிகள், நடவடிக்கை எடுக்காமல், கிடப்பில் போட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை கண்டித்தும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், நேற்று காலை 9.00 மணிக்கு பாகூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில், ராமலிங்கம் தரையில் அமர்ந்து, உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கினார். தகவலறிந்து சென்ற பாகூர் போலீசார், அனுமதி பெறாமல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது சட்டப்படி தவறு என கூறி, ராமலிங்கத்தை வெளியேற்றினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X