பட்டதாரி பெண் மாயம்

Added : பிப் 14, 2020
Share
Advertisement

புதுச்சேரி:திருமணம் நிச்சயம் செய்யப்பட இருந்த நிலையில், மாயமான பட்டதாரி பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

முத்தியால்பேட்டை சாமி முதலியார் வீதியை சேர்ந்தவர் கருப்பண்ணசாமி. இவரது மனைவி அருள் மணி. இவர்களின் மகள் ஜெயதேவி, 24. எம்.காம்., பட்டதாரி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருப்பண்ணசாமி. இறந்துவிட்ட நிலையில், அருள்மணி வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். ஜெயதேவிக்கு திருமணம் செய்ய முடிவு செய்து, மாப்பிள்ளை பார்த்து, பிப்.12ம் தேதி நிச்சயம் செய்யப்பட இருந்தது.

இந்நிலையில், கடந்த 11ம் தேதி, ஜெயதேவி தோழி வீட்டுக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. தோழிகளின் வீடு உள்ளிட்ட இடங்களில் தேடியும் ஜெயதேவி கிடைக்கவில்லை.

பெரியகடை போலீசில் அருள்மணி கொடுத்த புகாரில், தனது மகள் ஜெயதேவியை ஜெயக்குமார் என்ற வாலிபர் கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகப்படுவதாக கூறி உள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X